காபுலில் மற்றொரு தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறிய நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது.
வெடிப்பு சத்தம் எங்கு நடந்தது என்பது சரியாக தெரியாத நிலையில் குவாஜா புகிரா என்ற பகுதியிலிருந்து அதிகமாக புகை வந்து கொண்டிருக்கிறது. காபூல் விமான நிலையத்திற்கு வடக்கு வாயில் அருகிலுள்ள வீட்டை ராக்கெட்டின் மூலம் வெடிக்க வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் விமான நிலையத்தில் தற்போது வரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது வரை கிடைத்த தகவலின் படி, இந்த வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காபூலில் அமெரிக்க படைகள் இருந்த அதே இடத்தில் தற்போது ராக்கெட்டின் மூலம் வெடி விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்து நடந்த பகுதியில் இருந்து எங்களுக்கு சரியான தகவல் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களை அமெரிக்கா தற்போது குறி வைத்துள்ளதாக கூறியுள்ளனர். இதற்கிடையே காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தவிருந்த ஐஎஸ்ஐஎஸ் தற்கொலை போராளிகளை அமெரிக்கா குறி வைத்ததாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
காபூல் விமான நிலையம் அருகே மீண்டும் தாக்குதல் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்த அடுத்த சில மணி நேரங்களில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் தன் குடிமக்களை விமான நிலைய அருகில் இருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தினார் ஜோ பைடன். காபூலில் நிலைமை மிகவும் மோசமானதாக ஆகியுள்ளது, அடுத்து 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளார். கடந்த வருடம் காபூலில் கொல்லப்பட்ட 13 அமெரிக்க வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஜோ பைடன் மற்றும் அவர் மனைவி ஜில்பிடன் டோவர் ஏர் போர்ஸ்க்கு தற்போது வந்துள்ளனர்.
#Kabul blast video. Some sources suggest it was a rocket attack in the PD Khwaja Baghra area of the capital. pic.twitter.com/IKMPRdeHT5
— Arshad Yusufzai (@YusufzaiArshad) August 29, 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe