சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.
இதுதவிர, ஐஎஸ் தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மிகப்பெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் விமானத்தை கடத்துவதற்காக சாத்தியாமான முயற்சிகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு முகமைகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது, இதனையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விமான நிறுவனங்கள் பயணிகள் கடைசி நிமிடத்தில் வருவதை விட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளன. விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
போர்த்துகல் நாட்டில், கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்த ஊரான மெடிராவில் உள்ள விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து போட்டிகளில், போர்த்துகல் வென்ற முதல் கிண்ணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரொனால்டோ தலைமையில், போர்த்துகல் அணி பெற்ற மிகப் பெரிய வெற்றி பெற்றமையினால் ரொனால்டோவை கௌரவிக்கும் வகையில், அவரது பெயரை விமான நிலையத்துக்கு சூட்ட, அந்த நாட்டு ஜனாதிபதி மிகுவேல் அலெகுரேக் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மெடிரா விமான நிலையம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விமானநிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத் போன்ற 7 விமான நிலையங்களில் பயணிகள் கொண்டு செல்லும் சூட்கேஸ் உள்ளிட்ட உடைமைகளின் சோதனை நடை முறையின் போது பாதுகாப்பு முத்திரை பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் விமான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கடந்த வாரம் பங்கேற்றனர். இதில் விமானப் பயணிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நடைமுறைகளை சற்று மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு போன்ற ஆறு விமான நிலையங்களில் பயணிகள் கொண்டு செல்லும் சூட்கேஸ் உள்ளிட்ட உடைமைகளின் சோதனை நடை முறையின் போது பாதுகாப்பு முத்திரை பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் விமான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கடந்த வாரம் பங்கேற்றனர். இதில் விமானப் பயணிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நடைமுறைகளை சற்று மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தற்காலிகமாக மூடப்பட்ட திருப்பதி விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
வர்தா’ புயல் காரணமாக விமான சேவைகள் நேற்று முடங்கியுள்ளன.
இந்நிலையில் திருப்பதி விமான நிலையம் ‘வர்தா’ புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது. புயல் காற்று மற்றும் மழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட திருப்பதி விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து இன்று ஐதராபாத் திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக பல்லாயிரகணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தில் கூடினர். சிந்து வந்ததும், அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாக கோஷமெழுப்பி சிந்துவை வரவேற்றனர்.
தீவிரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு மற்றும் சோதனைகளை 'உஷார்' படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விமான நிலைய பாதுகாப்புக்கு என பிரத்யேகமாக பாதுகாப்பு படை பிரிவை உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் கீழ் நாட்டின் அனைத்து விமான நிலையங்களின் சோதனை மற்றும் பாதுகாப்பை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.