Success Tips For Happy Life | வாழ்க்கையில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் கடின உழைப்புடன் கூடிய தீர்க்கமான முடிவெடுக்கும் திறனும் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெளிவான முடிவில்லாமை உங்களை தோல்விக்கு வழிவகுக்கும். நல்ல சிந்தனை, நல்ல நட்பு இருந்தால் வெற்றி உங்களுக்கு பெரிய விஷயமில்லை. ஆனால், உங்களின் உழைப்பு அதீதமாக இருந்து, தவறான சிந்தனை கொண்ட அல்லது எதிர்மறையான எண்ணம் செயல்களை உடையவர்களுடன் இருந்தால் நீங்கள் எப்போதும் வெற்றி பெறவே முடியாது. வெற்றிக்கு அருகில் கூட செல்லமாட்டீர்கள். உங்களுடைய உழைப்பு, நேரம் எல்லாமே வீண். அதனால், எதிர்மறை சிந்தனை கொண்ட நபர்களிடம் இருந்து எப்படி விலகியிருப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எதிர்மறை எண்ணங்களை உடைய நபர்களை அடையாளம் காண்பது எப்படி?
எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் எப்போதும் முடியாது, நடக்காது, இதெல்லாம் வீண் என எந்த செயலுக்கும் குறைகூறி கொண்டே இருப்பார்கள். நல்ல விஷயமாக இருக்கும் என நினைத்து ஒரு முடிவெடுக்கும்போது, அதற்கு என்னென்ன விஷயங்களில் எல்லாம் இடர்பாடுகள் வரும் என்பதை பூதாகரமாக கூறி, அந்த விஷயத்தை செய்யக்கூடாது என்பதற்கான எல்லா தடைகளையும் கூறிக் கொண்டே இருப்பார்கள். ஒருவருடன் இருக்கும்போதெல்லாம், அவர்கள் மற்றவர்களைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்களின் குறைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பர். அத்தகையவர்களிடமிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம்.
மேலும் படிக்க | பிறர் தவறு செய்யும் போது அவர் மனதை புண்படுத்தாமல் நேர்பட பேசுவது எப்படி?
எதிர்மறை நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது எப்படி?
எதிர்மறை நபர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள். எல்லாவற்றிலும் குறைகளைக் கண்டுபிடித்து மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் இருந்து விலகியிருக்கவும். பிறரின் மகிழ்ச்சியைப் பார்த்து பொறாமை கொண்டால், அவர் உங்கள் மீது பொறாமை கொள்ள அதிக நாட்கள் ஆகாது. அவர்களை உங்கள் அருகில் வைத்திருக்க வேண்டாம். மகிழ்ச்சியாக பேச தொடங்கினாலும், முடிவில் வெறுப்பு, கோபம் வருகிறதா?, அவர்களிடம் இருந்து விலகிக்கொள்ளவும்.
நெகடிவ் நண்பர்களை விலக்க டிப்ஸ்
எதைப்பற்றியாவது, யாரைப்பற்றியாவது குறைக் கூறிக் கொண்டிருந்தால் அவர்களிடம் அப்படி பேசாதீர்கள் என முதலில் தெரிவித்துவிடுங்கள். அத்தகைய பேச்சுகளை ஆர்வமாக கேட்க வேண்டாம். ஆரம்பிக்கும்போதே தடுத்துவிட வேண்டும். மீண்டும் மீண்டும் அதை செய்தால், அப்படியான விஷயங்களை கேட்க எனக்கு விருப்பமில்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவும். அதனையும் அவர்கள் கேட்கவில்லை என்றால், பேசுவதை தவிர்த்துவிடவும்.
வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
மனதை எப்போதும் நேர்மறையாக சிந்திக்க பழக்கப்படுத்த வேண்டும். எந்தவொரு விஷயத்தின் நேர்மறை அம்சங்களை அறிந்து, உங்கள் சூழலுக்கு அது ஏற்றதாக இருக்குமா? என்பதை உணர்ந்து, அதற்கு ஒத்துவரக்கூடிய நண்பர்களுடன் சேர்ந்து பழகவும். குறைந்தபட்சம் நீங்கள் எல்லா விஷயங்களையும் மறந்து மகிழ்ச்சியை மட்டுமே பெறக்கூடிய நண்பர்களுடன் பழகுவது சிறந்தது. யாரை பற்றியும் பேசாமல், ஜாலியாக இருக்கும் நட்புக்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான விஷயங்களில் எப்போதும் நேர்மறை சிந்தனையுடன் கவனம் செலுத்துங்கள். வெற்றி கிடைக்கும்.
மேலும் படிக்க | சுடு தண்ணீர் vs குளிர்ந்த நீர் : குளிர் காலத்தில் எந்த தண்ணீரில் குளிக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ