காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டி குடிக்கவே கூடாது..! எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா?

Green Tea | காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்கவே கூடாது, எப்போது அந்த டீயை குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து குடிக்கவும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 17, 2024, 07:14 AM IST
  • கிரீன் டீ வெறும் வயிற்றில் வேண்டாம்
  • காலையில் குடித்தால் சிக்கல் வரும்
  • எப்போது குடிக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்
காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டி குடிக்கவே கூடாது..! எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா? title=

Green Tea Tips Tamil | காபி, டீ குடிக்க முடியாதவர்கள் கூட கிரீன் டீயை (Green Tea) குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். காரணம், காபி - டீக்கு பயன்படுத்தபடும் தூள் இதில் பயன்படுத்தாமல் தேயிலை பச்சையாக வைத்து தயாரிக்கப்படுகிறது இந்த டீ. இதில் ஆரோக்கியத்துக்கு நன்மையான விஷயங்கள் அதிகம் இருப்பதால் மருத்துவர்கள் கூட கிரீன் டீ குடிக்க அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால் இந்த கிரீன் டீயை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. கிரீன் டீ குடிப்பதற்கு என சரியான நேரம் இருக்கிறது. அதனால் இந்த டீ எப்போது குடிக்க வேண்டும்? எப்போது குடிக்கக்கூடாது? என்பதை தெரிந்து கொண்டு குடிப்பது அவசியம். இதனால் பக்க விளைவுகளை தவிர்க்கலாம். 

கிரீன் டீ குடிப்பதால் என்ன பிரச்சனை

காபி, டீ குடிப்பதற்கு இருக்கும் வழிமுறைகளைப் போலவே கிரீன் டீ குடிப்பதற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன. டீ, காபியை அடிக்கடி குடித்தாலும் பிரச்சனை, அதனைப்போலவே கிரீன் டீயும் நேரம் வரைமுறை இல்லாமல் குடித்தால் பிரச்சனை. ஏனென்றால் கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், கொழுப்புடன் நேரடியாக ரியாக்ட் செய்யக்கூடியது. இது செரிமானத்தில் பிரச்சனையை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், கிரீன் டீயை எப்போது தினமும் குடிக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | இரவில் தூக்கம் வரவில்லையா? மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!

கிரீன் டீ குடிப்பதற்கான சரியான நேரம் : 

* காலை உணவுக்கு 1-2 மணி நேரம் கழித்து கிரீன் டீ குடிக்கலாம்.
* மதிய உணவுக்கு 1 முதல் 2 மணி நேரம் கழித்து ஒரு கப் கிரீன் டீ குடிக்கவும்.

ஆக்ஸிஜனேற்ற சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதற்கான சரியான விதி இதுதான். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை உறிஞ்சி செயலிழக்கச் செய்து, அவை சேதமடையாமல் தடுக்கின்றன.

வெறும் வயிற்றில் கிரீன் டீயை ஏன் குடிக்கக்கூடாது?

கிரீன் டீயில் வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன, அவை வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் செரிமானத்தை சீர்குலைக்கும். இது அசிடிட்டி உள்ளிட்ட வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை உண்டாக்கும். அதுமட்டுமின்றி வயிற்றின் இயற்கையான செரிமானத்தையும் பாதிக்கும். எனவே, காலையில் வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்கவும். உணவுக்கு இடையில் அல்லது உணவுக்குப் பின் அதை எடுத்துக்கொள்வது சரியான வழிமுறை.

ஒரு நாளைக்கு 1 கப் கிரீன் டீ போதுமா?

ஒரு நாளைக்கு 1-3 கப் கிரீன் டீ குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு 1 கப் கிரீன் டீ குடித்தால் போதும். பெரும்பாலான க்ரீன் டீயில் காஃபின் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். காஃபின் நீக்கப்படாவிட்டால், அதிக அளவு கிரீன் டீ குடிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது உங்களை நீரிழப்பு உணர்வை ஏற்படுத்தும் மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

பொதுவான சில குறிப்புகள்

எந்த டீயாக இருந்தாலும் அதனை குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுத்துக் கொள்ளும்போது நிச்சயம் பக்கவிளைவுகள் இருக்கும். உதாரணமாக ஒரு நாளைக்கு 4 முறைக்கு மேல் டீ குடிக்கிறீர்கள் என வைத்துக் கொண்டால் உங்களுக்கு தூக்க பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது. செரிமான ஆகாமல் மலச்சிக்கல், அமில பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அத்துடன் இந்த பிரச்சனைகளுடன் கூடிய பக்கவிளைவுகளை நாட்பட்ட அளவில் எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இதனை எல்லாம் நீங்கள் கருத்தில் கொள்ளுங்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இரத்த சர்க்கரை நோய் குறித்த சில கட்டுக்கதைகள்.... அவசியம் தெரிஞ்சுக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News