பணி ஓய்வுக்குப் பிறகு மாதா மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் தரும் அரசு திட்டம்: இதோ கணக்கீடு

National Pension System: அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு செலவுகள் குறித்த பதற்றம் இருக்கும். ஏனெனில், அந்த நேரத்தில் வயது மூப்பு காரணமாக நமது செலவுகள் அதிகரிக்க நேரிடலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 16, 2024, 02:12 PM IST
  • NPS இல் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஒரு பெரிய நிதியைக் குவிக்கலாம்.
  • இந்த திட்டத்தின் மூலம் ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1.5 லட்சம் ஓய்வூதியமாகப் பெறலாம்.
  • இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
பணி ஓய்வுக்குப் பிறகு மாதா மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் தரும் அரசு திட்டம்: இதோ கணக்கீடு title=

National Pension System: பணம் சென்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்று. நாம் பணி செய்து, மாத சம்பளம் ஈட்டி அதன் மூலம் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கிறோம். ஆனால், அதே நேரம், பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கும் திட்டமிடுவது அவசியம்மாகும். 

அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு செலவுகள் குறித்த பதற்றம் இருக்கும். ஏனெனில், அந்த நேரத்தில் வயது மூப்பு காரணமாக நமது செலவுகள் அதிகரிக்க நேரிடலாம். வருமானம் ஈட்டும் தெம்பும் உடலில் இருக்காது. ஆனால், முதுமையில் மாத வருமானம் பெற பல திட்டங்கள் உள்ளன. இவற்றில் அரசாங்கமே பல திட்டங்களை நடத்துகின்றன. அவற்றில் ஒரு சிறந்த திட்டம் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS).

தேசிய ஓய்வூதிய அமைப்பு

NPS இல் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஒரு பெரிய நிதியைக் குவிக்கலாம். நீங்கள் விரும்பினால், இந்த திட்டத்தின் மூலம் ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1.5 லட்சம் ஓய்வூதியமாகப் பெறலாம். ஆம், தேசிய ஓய்வூதிய அமைப்பில், என்பிஎஸ் ஊறுப்பினர்கள் (NPS Member) ஒருவர் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தின் பலனைப் பெறுகிறார்கள். 1.5 லட்சம் மாத ஓய்வூதியத்தைப் பெற நீங்கள் NPS இல் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை இங்கே காணலாம்.

ஒவ்வொரு மாதமும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்

- என்பிஎஸ் சந்தாதாரர்கள் (NPS Subscribers) மாதம் ரூ.1.5 லட்சம் ஓய்வூதியம் பெற, ஒவ்வொரு மாதமும் ரூ.7,000 முதலீடு செய்ய வேண்டும். 
- NPS சுமார் 12 சதவிகிதம் ஆண்டு வருமானத்தை அளிக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். 
- 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ரூ.7,000 முதலீடு செய்தால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ.29,40,000 முதலீடு செய்திருப்பீர்கள். 
- இந்த முதலீட்டில் 12 சதவீதம் லாபம் சேர்த்தால், சுமார் ரூ.4.54 கோடி நிதி உருவாகும்.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு பெரிய அப்டேட்: EPF பணத்தை எடுக்கும் விதிகளில் மாற்றம், விவரம் இதோ

இந்த நிதியில் 40 சதவீதத்தை வருடாந்திர தொகை (Annuity) வாங்க பயன்படுத்தலாம். மீதமுள்ள 60 சதவீத நிதியை மொத்தமாக திரும்பப் பெறலாம். ஆனுவிட்டி வாங்கிய பிறகு, அதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 லட்சம் ரூபாய் ஓய்வூதியமாகப் பெற முடியும்.

NPS இல் வரிச் சலுகைகள் கிடைக்கின்றன

NPS ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) இயக்கப்படுகிறது. வருடாந்திரத்தை வாங்க, நீங்கள் NPS நிதியில் 40 சதவீதத்தைப் பயன்படுத்த வேண்டும். இது தவிர, மீதமுள்ள 60 சதவீத தொகையை மொத்தமாக திரும்பப் பெறலாம். மொத்த தொகையை எடுக்கும்போது அதற்கு வரி விதிக்கப்படுவதில்லை. அதற்கு முழுவதுமான வரி விலக்கு கிடைக்கிறது.

வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகையும் கிடைக்கும். இது தவிர, பிரிவு 80CCD (1B) இன் கீழ் ரூ. 50,000 வரையிலான வருடாந்திர முதலீட்டில் வரி விலக்கும் கோரலாம்.

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: ஜனவரிக்கு முன் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News