சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

Last Updated : Apr 16, 2017, 02:17 PM IST
சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு title=

சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் விமானத்தை கடத்துவதற்காக சாத்தியாமான முயற்சிகள் எடுக்கப்படும் என  பாதுகாப்பு முகமைகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது, இதனையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

விமான நிறுவனங்கள் பயணிகள் கடைசி நிமிடத்தில் வருவதை விட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளன. விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. 

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. பாதுகாப்பு பணியில் கூடுதல் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். 

மேலும் விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. வெளிநாட்டு முனையம், உள்நாட்டு முனையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் கூடுதல் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். 

சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் உள்ளதா. என்பது குறித்து கண்காணிப்பு காமிரா மற்றும் ரோந்து பணி மூலம் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதே போல் மும்பை, ஐதராபாத் விமான நிலை யத்திலும் உச்சகட்ட பாது காப்பு போடப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி 2015-ம் ஆண்டும் இதுபோன்ற விமான கடத்தல் முயற்சி தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து விமான நிலையங்களில் விமான கடத்தல்களுக்கு எதிராக நேர்த்தியாக செயல்படுவது தொடர்பாக விமான நிலையங்களில் பாதுகாப்பு படை வீரர்களின் பயிற்சியும் நடைபெற்றது. அப்போது ஏர் இந்தியாவின் விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்த திட்டமிடப்பட்டதாக எச்சரிக்கப்பட்டு இருந்தது.

Trending News