திருப்பதியில் இருந்து ஐதராபாத்துக்கு இண்டிகோ 6இ 7117 ரக விமானம் ஒன்று நேற்று இரவு 8.55 மணியளவில் புறப்பட்டு சென்றது. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரவு 10.25 மணியளவில் விமானம் தரையிறங்கியபொழுது விமானத்தின் டயர் வெடித்தது.
ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
டார்ஜீலிங் மாவட்டத்தில் பாக்தோக்ரா விமான நிலையத்தில், பெண்களுக்காக சுகாதார பட்டைகள் (Sanitary Napkin) துப்புரவு இயந்திரங்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது!
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று திடிரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் ஏற்ப்பட்டது. இந்த தீப்பிடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து ஸ்ரீநகரில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.
ஒகி புயலில் சிக்கி காணாமல்போன குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் அற்ற மாநகராக சேலம் உருவாக்கப்படும் என்று சேலம்-பெங்களூரு சாலையின் புதிய மேம்பால பணிக்கான அடிக்கல்நாட்டு விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களில் நுழைய, அடையாளச்சான்றாக மொபைல் ஆதாரை பயன்படுத்தலாம் என்று விமான பாதுகாப்பு முகமை புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல், பெற்றோர்களுடன் வரும் சிறுவர்களுக்கு அடையாளச்சான்று அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.மொபைல் ஆதார் எனப்படும், எம் - ஆதார், 'ஆப்'பை, மொபைல் போனில், ஆதார் அடையாள அட்டை ஆணைய இணையதளம் மூலம், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம், நம் ஆதார் தகவல்களை, தேவைப்பட்ட இடங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்.
நாட்டின் முதல் முழு ஆதார் அடிப்படையாக கொண்டு இயங்கும் விமான நிலையமாக பெங்களூரு சர்வதேச விமானநிலையம் மாற உள்ளது.
2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பெங்களூரு, கேம்பிகவுடா சர்வதேச விமானநிலையத்திற்குள் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.
விமான பயணிகளின் தனிப்பட்ட அடையாளங்களை உறுதி செய்து கொள்வதற்காக ஆதாரை அடைப்படையாக கொண்ட முறையை அறிமுகப்படுத்த நினைத்திருப்பதாக பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கூடுதலாக அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புவது தொடர்பாக இன்று காலை அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி ஜிம் மேட்டிஸ் காபூல் வந்தடைந்தார்.
அவரது விமானம் வந்திறங்கிய சிறிது நேரத்தில் காபுலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே தீவிரவாதிகள் ஏவிய ஒரு ராக்கெட் வந்து விழுந்தது.
அடுத்தடுத்து, காபூல் நகரின் பல பகுதிகளில் சுமார் 20 ராக்கெட்கள் ஏவப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முடிவடைந்தது.
இந்த போட்டியில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியானது சுமார் 10.30 மணியளவில் முடிவடைந்தது.
இரு அணிகளுக்கும் இடையிளான இரண்டாவது ஒருநாள் வரும் வியாழக்கிழமை கொல்கத்தாவில் நடக்கவுள்ளதால் நேற்றைய போட்டி முடிவடைந்தவுடன் இந்திய அணி கொல்கத்தா விரைந்தனர். அப்போது விமான நிலையத்தினில் டோனி சற்று நேரம் ஓய்வெடுத்தார்.
அந்த தருனத்தின் புகைப்படங்கள் தற்போது இனையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. டி-20 கிரிக்கெட் போட்டியை 1-0 கணக்கில் இந்தியா வென்றது.
இலங்கைக்கு எதிரான ஒட்டுமொத்தத் தொடரையும் 9-0 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியை முழு ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.
இலங்கை சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு திரும்பிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
சீனாவில் உள்ள விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர்களால் இந்தியப் பயணியர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளதை குறித்து விசாரணை நடக்கிறது.
இந்தியா - சீனா இடையேயான பிரச்னையால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், சீன விமான ஊழியர்களால் இந்திய பயணியர் ஒருவர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் செயல்படும், பஞ்சாப் சங்கத்தின் செயல் இயக்குனர், சத்னாம் சிங் சாசல், வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.