சர்வதேச குற்றவாளியான தாவூத் இப்ராகிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு பாகிஸ்தான் கராச்சி நகரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
1980களில் மும்பையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 'நிழல் உலக தாதா'. 1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமை பிடிக்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானிடம் உதவி கேட்டும் எந்தவித பிரயோஜனமும் இல்லை.
இந்நிலையில், தாவூத் இப்ராகிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கராச்சி நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வந்த தாவூத் இப்ராஹிம் உயிரோடு இருப்பதற்காக வாய்ப்பும் குறைவு என்றும் கூறப்படுகிறது.
தாவூத் உடல்நிலை குறித்த தகவல்களை பாகிஸ்தான் அரசு மறைத்து வருவதாக இந்தியா கூறிவந்தது. இந்நிலையில், தாவூத் குறித்து இத்தகவல் பரவி வருகிறது. தாவூத் இப்ராஹிம் பற்றிய தகவல்களை பாகிஸ்தான் பல ஆண்டுகளாக மறைத்து வந்துள்ளது.
கராச்சியில் 6000 சதுர அடி பங்களாவில் தாவூர் மறைந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தன்னிடம் உள்ள பணத்தை போதை பொருள் கடத்தலுக்கும், ஐஎஸ் தீவிரவாத குழுக்களுக்கும் செலவு செய்து வருகிறார். தீவிரவாதிகளின் பாதுகாப்பு வளையத்திற்கு மறைந்து வாழ்ந்து வருகிறான் தாவூத்.