ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
வாட்ஸ்-அப் வலைதளம் மூலமாக பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு கொண்டு உள்ளனர் என்பதும் தெரியவந்து உள்ளது.
இந்நிலையில் தீவிரவாதம் மற்றும் கல் வீசியவர்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் இருந்து 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சிறைக்குள் செல்போன்கள் நடமாடுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்து உள்ளனர், இதனையடுத்து போலீசார் மற்றும் சிறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு செல்போன்களை பறிமுதல் செய்து உள்ளனர். சிறையில் பயங்கரவாத சம்பவங்களில் தொடர்பு உடையவர்களும் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர், அவர்களிடம் இருந்தும் செல்போன்களை பறிமுதல் செய்துனர்.