Rain alert, school holiday Tamilnadu Today | தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், பள்ளிகள் விடுமுறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை இரண்டு நாட்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நேற்றிரவு மழை கொட்டித் தீர்த்தது. இதனால், மழை அதிகம் இருக்கும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளது. அதாவது, அந்தந்த பகுதிகளில் இருக்கும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அதனால், பள்ளி மாணவர்கள் அவரவர் படிக்கும் பள்ளிகளின் மூலம் இன்று விடுமுறையா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.
ராமநாதபுரத்தில் மழை எவ்வளவு?
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை ராமநாதபுரத்தில் சுமார் 41 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்திருக்கிறது. பாம்பனில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக 3 மணி நேரத்தில் 19 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இது வரலாறு காணாத மழைப்பொழிவு ஆகும். இவ்வளவு குறைவான நேரத்தில் 19 சென்டி மீட்டர் மழை இதற்கு முன் கொட்டியதில்லை. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீர் உட்புகுந்துள்ளது. கடற்கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. சில இடங்களில் கடல் அலை சீற்றம் காரணமாக மண்ணரிப்பும் ஏற்பட்டிருக்கிறது. அரசு சார்பிலும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் தேங்கிய நீர் கடல்போல் காட்சியளித்தது.
மேலும் படிக்க | ரெட் அலர்ட்... தென் மாவட்டங்களில் குவியும் மழை மேகங்கள் - பள்ளிகளுக்கு விடுமுறையா?
கனமழை எச்சரிக்கை
இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்க்கிறது. பல இடங்களில் விடிய விடிய கனழை பெய்தது. சில இடங்களில் தூரல் மழையும் பெய்து கொண்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் உள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் நகர்வை கண்காணித்து வரும் வானிலை ஆய்வு மையம், இது புயலாக மாற வாய்ப்புள்ளதா? என்பது விரைவில் தெரிந்து விடும் என்றும் கூறியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ