EPF Withdrawal Rules: வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார் என ஒரு பழமொழி உண்டு. இவை இரண்டுமே சாமான்ய மக்களுக்கு மிகவும் சவாலானவை என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. வீடு வாங்குவது அல்லது சொந்தமாக வீடு கட்டுவது என்பது அனைவருக்கும் உள்ள ஒரு கனவு. அதற்கு வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கலாம். அதே சமயத்தில், கடன் வாங்க வேண்டாம் என நினைப்பவர்களும், வீடு வாங்க பிஎப் கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்திக் கொண்டு மீதி தேவைக்கு கொஞ்சம் கடனாக வாங்கலாம் என நினைப்பவர்களும், பிஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் .
வீடு கட்ட அல்லது புதிய வீட்டை வாங்க நினைப்பவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறும் வசதி உள்ளது. குறிப்பாக தங்கள் கனவு இல்லத்தை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க சில நிபந்தனைகள் மற்றும் விதிகள் உள்ளன.
வீடு வாங்குவதற்கு PF இலிருந்து பணம் எடுப்பதற்கான விதிகள்
EPFO விதிகளின் கீழ், PF கணக்கு வைத்திருப்பவர்கள் வீட்டை வாங்குவதற்கும், கட்டுவதற்கும் அல்லது பழுது பார்ப்பதற்கும் ஓரளவு திரும்பப் பெறலாம். ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
1. PFல் இருந்து பணத்தை எடுக்க, EPFO உறுப்பினராக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பது அவசியம்.
2. பிளாட் அல்லது வீடு வாங்க, உங்கள் மாதச் சம்பளத்தின் 24 மடங்கு (அகவிலைப்படி உட்பட) அல்லது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகை, எது குறைவோ, அந்த அளவிற்கு பணத்தை திரும்பப் பெறலாம்.
3. வீடு கட்டுவதற்கு, பணத்தை திரும்ப பெறும் வரம்பு மாத சம்பளத்தை விட 36 மடங்கு வரை இருக்கலாம்.
4. வீடு பழுதுபார்ப்பதற்காக மாதச் சம்பளத்தில் 12 மடங்கு வரை திரும்பப் பெறலாம்.
அரசு அல்லது தனியார் வேலை செய்து, தொடர்ந்து 5 ஆண்டுகளாக EPF கணக்கில் பங்களித்து வருகிறீர்கள் என்றால், இந்த வசதியைப் பெறலாம். வீடு வாங்குவது, வீட்டைக் கட்டுவது அல்லது புதுப்பிப்பது போன்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் பணம் திரும்ப பெற அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
மேலும் படிக்க | போன் ஸ்டோரேஜ் அடிக்கடி நிரம்பி விடுகிறதா... எதையும் நீக்காமலேயே சிக்கலை தீர்க்கலாம்
PF இலிருந்து பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் முறை:
EPF இலிருந்து பணத்தை எடுக்க நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். EPFO அல்லது UMANG செயலியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் படிவம்-31ஐ நிரப்பலாம். விண்ணப்பத்தின் போது, வீடு வாங்குவது தொடர்பான ஒப்பந்த நகல் அல்லது பில்டர் தொடர்பான ஆவணங்கள் போன்ற சொத்தை வாங்கியதற்கான அல்லது கட்டியதற்கான ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டும்.
PF கணக்கிலிருந்து பணம் எடுப்பதன் நன்மைகள்
1. PF கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்ட பணத்திற்கு வட்டி கிடையாது, இதன் காரணமாக நீங்கள் கூடுதல் கடன் வாங்க வேண்டியதில்லை.
2. PF கணக்கில் இருந்து திரும்பப் பெறுவதன் மூலம் உங்கள் சொந்த டெபாசிட் பணத்தை சரியாக பயன்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
3. வங்கிக் கடன்களைப் போலன்றி, PF பணத்தை திரும்பப் பெறுவதற்கு உத்தரவாதம் அல்லது பிணையம் தேவையில்லை.
4. PF பணத்தை திரும்பப் பெறுவதில் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
5. PF பணத்தை திரும்பப் பெற்ற பிறகு, உங்கள் PF இருப்பு குறையும், இது ஓய்வு நேரத்தில் நீங்கள் பெறும் தொகையைப் பாதிக்கலாம்.
6. EPFO நிர்ணயித்த நிபந்தனைகளைப் பின்பற்றுவது முக்கியம். இல்லையெனில் உங்கள் விண்ணப்பம் ரத்துசெய்யப்படலாம்.
மேலே கூறப்பட்டுள்ள இந்த நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்தால், PF கணக்கில் இருந்து பணம் எடுப்பதன் மூலம் உங்கள் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றலாம். இது ஒரு எளிய மற்றும் பாதுகாப்பான முறையாகும். இது நிதி சிக்கல்களில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பும் அளிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ