நாட்டின் சில பகுதிகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் டெல்லியின் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவி கவல்ப்ரீத் கவுர், தனது கையில் ‘நான் இந்திய குடிமகள், அரசியல் சாசனத்தில் உள்ள மதச்சார்பின்மைக்காக துணை நிற்பேன்’ என்று எழுதிய அட்டையை கையில் வைத்தபடி புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
ஒரு கோழியை பாலியல் ரீதியாக கொலை செய்த குற்றத்திற்காக பாக்கிஸ்தான் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பாக்கிஸ்தானின் ஹாப்சாபாத்தை சேர்ந்த பஞ்சாபில் இக்கொடுரம் நிகழ்ந்துள்ளது!
டி-20 சர்வதேச கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 119 புள்ளிகள் பெற்று 5_வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அதேபோல டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது.
பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா நாட்டில் செயல்பட்டு வந்த மோசக் பொன்சிகா நிறுவனம், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அந்த தகவலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரும் இடம்பெற்று இருந்தது.
பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் முனஜ்ஜா ஜிலானி எதிரான பாலியல் குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற தனக்கு, வாட்ஸ்- அப் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்தார் என ஜிலானி என்ற பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டினார்.
இதைக்குறித்து விளக்கம் அளிக்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது. இதுதொடர்பாக ஆராய்ந்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:-
2 வருடங்களுக்கு முன் மாயமான பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மீட்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் காணாமல் போன இந்தியரை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுத்த பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் கடத்தப்பட்டார். இந்நிலையில் 2 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே அவர் மீட்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் மோத உள்ளது.
இதில் கடைசி டி20 போட்டி, அவர் 29-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற இருக்கிறது.
அங்கு சென்று விளையாட, இலங்கை வீரர்கள் தங்கள் தயக்கத்தை தெரிவித்தனர். இது தொடர்பாக, வீரர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பினர். அதில் லாகூர் போட்டியை வேறு நாட்டில் நடத்த கோரிக்கை வைத்தனர். ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்துவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.