இரு சுயேட்சை MLA-க்களை அடுத்து மேலும் காங்கிரசை சேர்ந்த 5 MLA-க்கள் கர்நாடக முதல்வர் HD குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்ப பெருவதாக தகவல்கள் வந்துள்ளன
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை அதிமுக கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களான, மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள். அப்பொழுது தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பின் போது துறை முருகன் உடன் இருந்தார்.
புதுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியண்ண அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகிய 3 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டு கொண்டிருந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்ததாக எம்.எல்.ஏ. ரகுபதி தெரிவித்தார்.
அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இதில் 22 பேர் டி.டி.வி. தினகரனுக்கு தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இவர்களுடன் தினகரன் எதிர்கால அரசியல் பற்றி ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அதிமுகவுக்குள் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியிலும், ஆட்சியிலும் மீண்டும் நெருக்கடி உருவாகியுள்ளது என தெரிகிறது.
சென்னை ஐகோர்ட்டில் காஞ்சிபுரம் காவல்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் 119 எம்.எல்.ஏக்களின் வாக்குமூலங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு ரெசார்ட்டில் கடந்த 6 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தொகுதிகளின் எம்.எல்.ஏக்களை கடந்த சில நாட்களாக காணவில்லை எனவும் அவர்களை விரைவில் கண்டுபிடித்து தருமாறும் சென்னை ஐகோர்ட்டில் இரண்டு ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் 'கையை வெட்டுவேன்' என மிரட்டல் விடுத்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., கலைராஜன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போயஸ் கார்டன் முன் கூடியுள்ள சசிகலா அணியினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முதல்வர் ஓ.பி.எஸ்சை விமர்சித்து ஊடகங்களிடம் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களிடம் பேசிய தி.நகர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கலைராஜன் முதல்வர் ஓ.பி.எஸ்சின் கையை வெட்டுவேன்’ என மிரட்டல் விடுத்திருந்தார்.
தமிழகத்தில் ஆளும் அதிமுக-வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.