வரும் நாடாளுமன்ற தேர்தலை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததை அடுத்து, அவர்களின் மீதான தாக்குதல் குறைந்ததாக தெரியவில்லை. அந்த வரிசையில் தற்போது பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், ராகுலை இராவணனுடனும், பிரியங்கா சூர்ப்பனகையிடனும் ஒப்பிட்டு பேசி பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளார்.
ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்திக்கு முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக ப்ரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அதே உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பிஜேபி பொதுச் செயலாளராக இருக்கும் பிஜேபி எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்கிடம், பிரியங்கா காந்தி அரசியல் வருகையை குறித்து கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், ராமர் மற்றும் இராவணனுக்கு இடையே போருக்கு தொடங்க இருந்த போது, ராவணன் தனது சகோதரியான சூர்ப்பனகை அனுப்பினான். ஆனாலும் ராமர் வெற்றி பெற்றார். அதேபோல வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி ராமராகவும், ராகுல் காந்தி ராவணனாகவும், அவரது சகோதரியை பிரியங்கா காந்தி ராவணின் தங்கை சூர்ப்பனகையாக உள்ளனர்.
ஆகவே ராமாயணத்தில் எப்படி ஸ்ரீலங்காவை ராமர் வென்றாரோ? அதேபோல் வரும் தேர்தலில் ராமராகிய மோடி இராவணனையும் (ராகுல்காந்தி) சூர்ப்பனகையும் (பிரியங்கா காந்தி) வீழ்த்தி வெற்றி பெறுவார் என உறுதியாக நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சி ஒரு உடைந்த படகு என்று சுரேந்திர சிங் கூறினார். ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரசுக்கு "அரசியல் நிலைப்பாடு இல்லை" என்றும், 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் எனவும் அவர் கூறினார்.
இதேபோல ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை திருநங்கையுடன் ஒப்பிட்டு பேசிய பாஜக பெண் எம்எல்ஏ சாதனா சிங் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.