டெல்லி ஆளும் ஆம் ஆத்மி கட்சி MLA-க்கள் தகுதிநீக்கம் வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது!
AAP MLAs disqualification matter: Delhi High Court reserves its order in the case #officeofprofit pic.twitter.com/AlXxq7teaQ
— ANI (@ANI) February 28, 2018
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி, 21 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை சட்டப்பேரவை செயலாளர்களாக நியமித்தனர்.
"ஆதாயம் தரும் 2 பதவிகளில் எம்எல்ஏ-க்கள் இருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல் என்றும், அதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குடியரசு தலைவரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகார் கடிதமானது குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து எம்எல்ஏ -க்களிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.
21 எம்எல்ஏக்களில் ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்தார், எனவே 20 எம்எல்ஏ-க்கள் மீதான விசாரணை தொடர்ந்தது. பின்னர் இந்த 20 எம்.எல்.ஏ களையும் தகுதி நீக்கம் செய்யலாம் என குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆனையம் பரிந்துரைத்தது.
இதையடுத்து, இந்த 20 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்வதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களும் MLA-க்கள் தகுதி நீக்கத்திற்கு ஒப்புதல் அளித்தார். ஜனாதிபதியின் இந்த முடிவு-க்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி MLA-க்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவின் மீதான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில், வழக்கினை விசாரித்த சஞ்ஜீவ் காண்னா மற்றும் சந்தர் சேகர் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.