இன்றைய நவீன கம்ப்யூட்டர் யுகத்தில் ஆன்லைன் வங்கி மோசடிகள் ஒன்றும் புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளில் ஆன்லைன் மோசடிகள் பற்றிய பல வழக்குகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். கேஒய்சி, கிரெடிட் கார்டு அல்லது வங்கி புதுப்பிப்புகள் தொடர்பான போலி செய்திகள் மூலம் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். குறிப்பாக பான் புதுப்பிப்பு போன்ற அவசர விஷயங்களில் ஈடுபடும் நபர்களை இந்த மோசடிக்காரர்கள் குறிவைக்கிறார்கள். போலி பான் புதுப்பிப்பு மோசடியைப் போலவே, ஒரு புதிய மோசடி குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
புதிய மோசடி என்ன?
தற்போது பலர் ஏமாற்றப்படும் புதிய வகை ஊழலில், மோசடி செய்பவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் செயல்முறையைப் பயன்படுத்திக் கொண்டு, டேக்ஸ் டைம் ஸ்மிஷிங் பிரச்சாரங்கள் மூலம் மக்களை குறிவைக்கின்றனர். இந்த மோசடிக்காரர்கள் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். இந்த செய்திகள் பிரபலமான இந்திய வங்கிகளில் இருந்து வருவது போல் அனுப்பப்படுகின்றன. பயனர்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதே இதன் நோக்கமாகும்.
அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?
மோசடி செய்பவர்கள் பெறுநரின் வங்கிக் கணக்கு பிளாக் செய்யப்படும் என்று போலி குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள் என்ற் Sophos அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தங்கள் கணக்குகளில் தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டை தகவலை புதுப்பிக்குமாறு அவர்களிடம் கோரப்படுகின்றது. இந்த டெக்ஸ்ட் மெசேஜ்களில் ஒரு ஆண்ட்ராய்ட் பேக்கேஜ் ஃபைல் (APK) கோப்பைப் பதிவிறக்குவதற்கான இணைப்பும் இருக்கும்.
APK கோப்புடன் இணைக்கப்பட்ட ஒரு செயலி நிறுவப்பட்டால், ஆப்ஸ் உண்மையான வங்கிப் பயன்பாடாகத் தெரிகிறது. இதன் காரணமாக பயனர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்கள் போலியான செயலியில் தங்கள் வங்கித் தகவலை உள்ளிடும் வகையில் ஏமாற்றப்படுவார்கள்.
Tax-Time Smishing Scam என்றால் என்ன?
டேக்ஸ் டைம் ஸ்மிஷிங் மோசடிகளில், மோசடி செய்பவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலத்தில் மக்களை குறிவைக்கிறார்கள். மோசடி செய்பவர்கள் போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். அது பெறுநரின் வங்கியில் இருந்து வந்த செய்தி போலத் தோன்றும். இதன் மூலம் ஆபத்தான Android தொகுப்பு (APK) கோப்பைப் பதிவிறக்குவதற்கான இணைப்பை அனுப்புகிறார்கள்.
மேலும் படிக்க | Vivo-வின் 64MP கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜ் போன் ரூ.6,333-க்கு வாங்கலாம்
இந்த செயலி நிறுவப்பட்டதும், APK கோப்பு உண்மையானது போல் தோன்றும் போலி வங்கி உள்நுழைவு பக்கங்களைத் திறக்கும். பெறுநர் இந்தப் பக்கங்களில் ஏதேனும் தனிப்பட்ட தகவலை உள்ளிட்டால், இந்தத் தரவு வங்கிக்குப் பதிலாக இந்த இணைப்பை அனுப்பிய மோசடிக்காரர்களுக்கு மாற்றப்படும். ஆபத்தான APK -இல் உள்வரும் SMS டெக்ஸ்டை படிக்கும் திறனும் உள்ளது.
இந்த மோசடியைத் தவிர்ப்பது எப்படி?
1. உங்கள் வங்கி தொடர்பான தகவல் அல்லது நிதித் தகவல்களைக் கேட்கும் செய்திகளை நீங்கள் பெற்றால் கவனமாக இருங்கள். வங்கிகள், செய்திகள், செய்தியிடல் செயலிகள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் உங்களை ஒருபோதும் தொடர்பு கொள்ளாது.
2. இணைப்புகளைப் (அட்டாச்மெண்ட்) பெறும்போது கவனமாக இருங்கள். எந்த ஃபைலையும் திறக்கும் அல்லது பதிவிறக்கும் முன் அனுப்புநரின் அடையாளத்தைச் சரிபார்க்கவும்.
3. உங்கள் வங்கி அல்லது வேறு ஏதேனும் சேவை வழங்குநரிடமிருந்து நீங்கள் எதிர்பாராத செய்திகளைப் பெற்றால், தொலைபேசி அல்லது வழங்குநரின் உண்மையான மற்றும் பாதுகாப்பான இணையதளம் அல்லது பயன்பாடு அல்லது அருகிலுள்ள கிளை மூலம் நேரடியாக அவர்களின் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
4. நீங்கள் சந்தேகத்துக்குரிய SMS -ஐப் பெற்றிருந்தால், phishing@irs.gov என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ டெக்ஸ்ட் / SMS இன் நகலை ஒரு அடேச்மெண்டாக அனுப்பியோ, இந்த மோசடிகள் பற்றி புகார் அளிக்கலாம்.
மேலும் படிக்க | கூகுள் பிளேஸ்டாரில் ஆபத்தான மால்வேர்: ஆபத்தில் ஆண்ட்ராய்டு போன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ