பிளிப்கார்ட் விற்பனையில் பெரிய தள்ளுபடி, இன்னும் 2 நாட்களே முந்துங்கள்

நீங்கள் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க திட்டமிட்டால், விரைவில் உங்கள் திட்டம் நிறைவேறும். ஆம், பிப்ரவரி 23 முதல் பிளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக்ஸ் டே விற்பனை தொடங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 26, 2022, 02:20 PM IST
  • பிளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக்ஸ் டே சேல்
  • இந்த விற்பனையானது பிப்ரவரி 28 வரை இயங்கும்
  • குறைந்த விலையில் பெரிய திரை ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் விற்பனையில் பெரிய தள்ளுபடி, இன்னும் 2 நாட்களே முந்துங்கள் title=

நீங்கள் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க திட்டமிட்டால், விரைவில் உங்கள் திட்டம் நிறைவேறும். ஆம், பிப்ரவரி 23 முதல் பிளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக்ஸ் டே விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையானது பிப்ரவரி 28 வரை இயங்கும் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

பிளிப்கார்டின் இந்த விற்பனையில், ஸ்மார்ட் டிவி பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நீங்கள் ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த விற்பனை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே எலெக்ட்ரானிக்ஸ் டே சேலில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி விரிவாக காண்போம்.

மேலும் படிக்க | பிளிப்கார்ட் விற்பனை! 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை 17 ஆயிரத்தில் வாங்கலாம் 

முன்னதாக எலக்ட்ரானிக்ஸ் டே சேலில், ஜெர்மன் பிராண்டான ப்ளூபங்க்ட் 32-இன்ச் முதல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பெரும் தள்ளுபடி வழங்கப்பட்டது. தற்போது சிறப்பு என்னவென்றால், நீங்கள் ஐசிஐசிஐயின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், 10% கேஷ்பேக் பெறலாம். இது தவிர, டிவியில் 36% எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. மறுபுறம், நீங்கள் ஒரு மாத தவணையில் டிவி வாங்க விரும்பினால், நீங்கள் இஎமஐ வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எலக்ட்ரானிக்ஸ் டே சேலில் 32 இன்ச் மற்றும் 42 இன்ச்க்கு பெரிய தள்ளுபடி

ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.12,999க்கு கிடைக்கிறது, இது எச்டி-ரெடி திரை மற்றும் 40W ஸ்பீக்கர் வெளியீட்டை ஆதரிக்கிறது. இதில் 2 ஸ்பீக்கர்கள் உள்ளன. அதன் இரண்டாவது மாடல் 42-இன்ச் முழு-எச்டி (1,920x1080 பிக்சல்கள்), இது வெறும் ரூ.19,999க்கு கிடைக்கிறது. இது அற்புதமான சரவுண்ட் சான்றளிக்கப்பட்ட ஆடியோவைக் கொண்டுள்ளது மற்றும் 40W ஸ்பீக்கர் வெளியீட்டுடன் 2 ஸ்பீக்கர்களைப் பெறும்.

எலக்ட்ரானிக்ஸ் டே சேலில் குறைந்த விலையில் பெரிய திரை ஸ்மார்ட் டிவிகளை வாங்கவும்

* பெரிய திரை 50-இன்ச் அல்ட்ரா-எச்டி (3840x2160 பிக்சல்கள்) விலை ரூ.34,999க்கு கிடைக்கும்.

* அதே நேரத்தில், 55-இன்ச் அல்ட்ரா-எச்டி (3840x2160 பிக்சல்கள்) ரூ.38,999க்கு கிடைக்கும்.

* மேலும் 65 இன்ச் அல்ட்ரா-எச்டி சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 ரூ.54,999க்கு கிடைக்கும்.

மேலும் படிக்க | Tecno Spark 8C அறிமுகம்: ரூ.8,000-ஐ விட குறைந்த விலை, அசத்தும் அம்சங்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News