கூகுள் குரோமிற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய 6 சிறந்த பிரவுசர்கள்!

இனிமேல் கூகுள் குரோமை மட்டுமே பயன்படுத்த தேவையில்லை, அதற்கு மாற்றாக பாதுகாப்பான முறையில் உள்ள சில பிரவுசர்களை பயன்படுத்தலாம்.  

Written by - RK Spark | Last Updated : May 7, 2022, 08:15 AM IST
  • இணையத்தில் பல வெப் பிரவுசர்கள் உள்ளன.
  • அவற்றில் முதன்மையாக கூகுள் குரோம் உள்ளது.
  • குரோம் நமது தகவல்களை திருடுவதாக கூறப்படுகிறது.
கூகுள் குரோமிற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய 6  சிறந்த பிரவுசர்கள்! title=

பெரும்பாலும் நாம் ஏதேனும் ஒன்றை பற்றிய தகவலை அறியவோ அல்லது இன்னும் பிற இணைய செயல்பாடுகளுக்கு கூகுள் குரோமை தான் பயன்படுத்துகிறோம்.  தனியுரிமை பாதுகாப்புகளில் குரோம் கொஞ்சம் மந்தமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  கூகுளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு அதே சமயம் பாதுகாப்பான முறையில் சில பிரவுசர்களை பயன்படுத்தலாம், இதற்கென்று சிறப்பான ஆறு பிரவுசர்கள் உள்ளன அவற்றை இங்கே காண்போம்.

மேலும் படிக்க | ஒரே நம்பரில் இரண்டு போனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் :

பயன்படுத்த மிகவும் எளிதான, பாதுகாப்பான மற்றும் வேகமான பிரவுசராக மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் சிறந்து விளங்குகிறது.  இது பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.  இந்த பிரவுசர் உங்களை பற்றிய குறைந்தளவு டேட்டாக்களை மட்டும் தான் சேகரிக்கிறது, இவை உங்களது மின்னஞ்சல் முகவரிகளை கூட சேமித்து வைப்பதில்லை.

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் :

மைக்ரோசாஃப்டின் புதிய பிரவுசர் சிறப்பாக செயல்படுகிறது, எட்ஜ் என்பது குரோமுக்கு நேரடியான மாற்றுகளில் ஒன்றாக உள்ளது.  விண்டோஸ், மேகோஸ், லினக்ஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய தளங்களிலும் எட்ஜ் இலவசமாக கிடைக்கிறது.

விவால்டி :

டாப் ஸ்டாக்கிங்கை பயன்படுத்த முயற்சி செய்யவில்லையெனில் விவால்டியை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  இது ஒருபோதும் உங்கள் சுயவிவரத்தை விளம்பரப்படுத்தவோ, கண்காணிக்கவோ அல்லது திருடவோ செய்வதில்லை என்று உறுதியளிக்கிறது.  நீங்கள் பார்க்கும் தளங்கள், டவுன்லோட் செய்பவற்றை பிரவுசர் கண்காணிக்காது.

vivadi

பிரேவ் :

குரோமுக்கு மாற்றாக உள்ளார் பிரேவ் ஆனது ஆண்டி-ட்ராக்கிங் மற்றும் ஆட்பிளாக் பாதுகாப்புகளுடன் கூடிய சிறந்ததொரு பிரவுசராகும்.  இதில் நேரடியாக க்ரிப்டோ கரன்சி வாலட் இணைக்கப்பட்டுள்ளதால், இது க்ரிப்டோ பயனர்களுக்கு மிகவும் பிடதமான ஒன்றாக உள்ளது.  பிரேவ் ஆனது விண்டோஸ், மேகோஸ், லினக்ஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் குரோமியம் அடைப்படியிலான பிரவுசராகும்.

brave

ஓபரா :

ஓபரா மிகவும் சிறப்பான பிரவுசர் என்று கூறாவிட்டாலும், இதில் அதிகளவில் குறைபாடுகள் எதுவும் இல்லை.  இந்த பிரவுசர்கள் விளம்பரங்கள் மற்றும் ட்ராக்கர்களை தடுப்பதாக உறுதி அளிக்கிறது, இது பயனர்களுக்கு விபிஎன் ஆப்ஷனையும் வழங்குகிறது.  ஓபரா விண்டோஸ், மேகோஸ், லினக்ஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் உள்ளிட்டவற்றில்  இலவசமாக கிடைக்கிறது.

opera

டோர் :

தி ஆனியன் ரூட்டர் என்பதன் சுருக்கம் தான் இந்த டோர் பிரவுசர், வெங்காயத்தின் உள்புறம் எப்படி பல அடுக்குகளால் பாதுகாக்கப்படுகிறதோ அதேபோல தான் இதில் நம்முடைய தகவல்களும் பாதுகாக்கப்படுகிறது.  இதனை பயன்படுத்துவது திருட்டுத்தனமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் இதில் உங்களது ஐபி முகவரி மறைக்கப்பட்டு இருக்கிறது.  விண்டோஸ், லினக்ஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் உள்ளிட்டவற்றில் டோர் இலவசமாக இயங்குகிறது.

thor

மேலும் படிக்க | உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை நாசமாக்கும் செயலிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News