ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் போது ஜெ.தீபா-வின் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது.
இந்நிலையில் தான் அளித்த மனுவை பரிசீலனை செய்ததிலி குளறுபடி நிகழ்ந்துள்ளது என ஜெ.தீபா, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி-யிடம் புகார் அளித்தார்.
When I got to know my nomination form had been rejected,I rushed to check. To my shock I saw it was not the form I had submitted.My papers have been changed.I immediately filed a complaint with the #ElectionCommission that there has been foul play.#RKNagarByPoll
— J.Deepa (@JDeepaOfficial) December 7, 2017
இன்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அவர்களை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்...
"என்னுடைய வேட்பு மனு நிராகரிப்பு குறித்து விளக்கம் கேட்கையில், என்னுடைய விண்ணப்பத்தில் சில பகுதிகளை நான் நிரப்பவில்லை என்றார். பின்னர் என்னுடைய விண்ணப்பத்தினை கேட்டேன், அப்போது அவர்கள் காட்டியது நான் கொடுத்த விண்ணப்பம் கிடையாது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று லக்கானி என்னிடம் உறுதி அளித்தார்" என தெரிவித்துள்ளார்.!
நான் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று லக்கானி என்னிடம் உறுதி அளித்தார்.#Deepa #RajeshLakhoni #RKNagarByElection #RKNagarByPoll
— J.Deepa (@JDeepaOfficial) December 7, 2017