சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) இன்று ஆலோசனை நடத்தினார். அப்பொழுது அவர் நாம் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் காவிரி பிரச்சினையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்து தான் இருக்கும் என்றார். மேலும் அனைத்து கட்சி கூட்டத்தில் (All-party meeting) ஒருமனதாக மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மூன்று முக்கிய தீர்மானங்கள்:
தீர்மானம் 1:
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் (Mekedatu) எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் (Tamil Nadu Farmers) தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது.
தீர்மானம் 2:
இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் (All Party Full Support) தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.
ALSO READ | காவிரி தான் எங்களுக்கு வாழ்வுரிமை; தமிழ்நாட்டிற் முழு உரிமை உள்ளது: முதல்வர்
தீர்மானம் 3:
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் (Union Government) அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது.
இவ்வாறு அனைத்துக் கட்சி கூட்டத்தில் மூன்று முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேகதாது அணை பிரச்சனை குறித்து, அனைத்து சட்டமன்றக் கட்சியினருடன் இன்று (12-07-2021) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய தீர்மானங்கள் விவரம்:#DMK #CMMKStalin #Cauvery pic.twitter.com/p3dgVj1U3s
— DMK (@arivalayam) July 12, 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.