'மெட்ராஸ்' பட பாணியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை!

பட்டப்பகலில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த தந்தையை வெட்டி கொல்ல முயன்ற மகன், தந்தையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 21, 2022, 03:16 PM IST
  • சொத்து பிரச்சினையில் அரங்கேறிய கொடூரம்
  • மகனின் வெறிச்செயல் - பழிதீர்த்த தந்தை
  • கொலைகாடான நீதிமன்றம் - பதட்டம்
'மெட்ராஸ்' பட பாணியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை! title=

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அழகன். இவருக்கும் அவரது மகன் காசிராஜனுக்கும் ஏற்கனவே சொத்துப் பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, காசிராஜன் குடும்ப பிரச்சினை காரணமாக தனது தந்தை மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Crime,murder,Thoothukudi,father,son,மகனை வெட்டிக்கொன்ற தந்தை

இந்த வழக்கில் ஆஜராவதற்காக தமிழ் அழகன், அவரது தம்பி கடல் ராஜா மற்றும் அவரது உறவினர் காசிதுரை ஆகியோர் நீதிமன்றம் வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த காசிராஜன் தனது தந்தை தமிழ் அழகனை மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக்கொண்ட தமிழ் அழகன் மகனின் கையில் இருந்து அறிவாளை பிடுங்கி திருப்பி காசிராஜனை கொடூரமாக வெட்டியிருக்கிறார். அதில் காசிராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்திருக்கிறார்.

Crime,murder,Thoothukudi,father,son,மகனை வெட்டிக்கொன்ற தந்தை

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உயிரிழந்த காச ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் படிக்க | காதலனுக்காக இந்தியா வந்த பிலிப்பைன்ஸ் பெண் பலி - விபத்தா ? சதியா ?

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் திட்டமிட்டு கொலை செய்யும் கூட்டத்திற்கு மத்தியில் காவல்துறையினர் கூடி இருக்கும் நீதிமன்றம் மற்றும் காவல்நிலைய வளாகத்தில் நடந்தேறியிருக்கும் இச்சம்பவம் மெட்ராஸ் படத்தை நினைவுபடுத்துகிறது. சொத்து தகராறில் தந்தையே மகனை வெட்டி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ‘சுப்ரமணியபுரம்’ பட பாணியில் அரங்கேறிய கொலை !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News