Additional Pension For Pensioners: மத்திய அரசு பணிகளிலில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் ஓய்வூதியதாரர்கள் யாரேனும் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஓய்வூதிய அதிகரிப்பு பற்றிய ஒரு முக்கிய அப்டேட் உள்ளது.
Central Government Pensioners: வயதுக்கு ஏற்ப ஓய்வூதிய உயர்வு
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை வயதுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என்று 2023ல் நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின்படி, 65 வயதில் 5%, 70 வயதில் 10%, 75 வயதில் 15%, 80 வயதில் 20% என்ற வகையில் ஓய்வூதியத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்த பரிந்துரை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
Pension Hike: ஓய்வூதியத்தை அதிகரிப்பதன் நோக்கம் என்ன?
வயதான ஓய்வூதியதாரர்களை பொருளாதார ரீதியாக வலிமையாக்குவதே ஓய்வூதியத்தை அதிகரிப்பதன் நோக்கம் என்று ஜேபிசி இந்த பரிந்துரையில் கூறியிருந்தது. குறிப்பாக அவர்களின் வாழ்க்கையின் அந்த கட்டத்தில் அவர்களுக்கு அதிக உதவி தேவைப்படும் போது அவர்களது நிதி நிலை வலுவாக இருக்க வேண்டும் என்பதே இதன் பின்னால் இருக்கும் முக்கிய எண்ணம்.
தற்போதைய விதியின்படி, 80 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் 20% உயர்த்தப்படுகிறது. இது சரியான அளவு அல்ல. 65 வயது முதல் 75 வயது வரை அதிக பணம் தேவைப்படுகிறது. ஆனால் அதை விடுத்து 80 வயதிற்குப் பிறகு ஓய்வூதியத்தை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
70 முதல் 80 வயதிற்குள் அதிக இறப்பு விகிதம்
ஓய்வூதியம் பெறும் பலர் 70 முதல் 80 வயதிற்குள் இறப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வயதில் ஓய்வூதியத்தை அதிகரிப்பதன் மூலம் அவர்கள் ஓரளவு நிம்மதி பெறலாம். 80 வயதுக்குப் பிறகு ஓய்வூதியத்தை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. திட்டத்தின் உண்மையான பலன் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றால், ஓய்வூதியத்தை 65 வயதில் இருந்து உயர்த்த வேண்டும் என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: EPFO புத்தாண்டில் அளிக்கப்போகும் 5 முத்தான பரிசுகள்
ஒவ்வொரு ஆண்டும் 1% ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது
இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியத்தை 1% உயர்த்தவும் JPC முன்மொழிந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் 1% உயர்த்தப்பட்டால், ஓய்வூதியம் பெறுவோர் 80 வயது வரை காத்திருக்காமல், விரைவில் நிவாரணம் பெறுவார்கள். இந்த ஆலோசனைக்கு பல தரப்புகளிலிருந்து பாராட்டுதல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அரசுக்கு மக்களவை எம்.பி.யின் கோரிக்கை
மக்களவை எம்பி பென்னி பெஹனன், ஜேபிசி பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்துமாறு மத்திய அரசு மற்றும் நிதியமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓய்வூதிய உயர்வால் லட்சக்கணக்கான மூத்த குடிமக்கள் (Senior Citizens) பயன்பெறுவதோடு, அவர்களின் வாழ்க்கையும் நிதி நெருக்கடி இல்லாமல் கழியும். ஆகையால் இந்த பரிந்துரைகள் அமலுக்கு வர வேண்டும்.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய பரிந்துரைகள்
JPC இன் பரிந்துரைகள் ஓய்வூதியதாரர்களின் நலனுக்கு மிகவும் முக்கியமானவையாக உள்ளன. இந்த பரிந்துரைகளை அரசு தாமதமின்றி அமல்படுத்த வேண்டும். இது ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு நிவாரணம் அளிப்பதுடன், முதியோர்கள் மீதான அரசின் பொறுப்பையும் எடுத்துக்காட்டும். மக்களவையில் இதன் பேச்சு எடுக்கப்பட்டுள்ளதால், இந்த பரிந்துரைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ