தமிழகத்தில் மழைக்காலம் முடிந்து குளிர்க்காலம் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலானோருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பாரபட்சம் இல்லாமல், மார்பில் சளி சேர்ந்து பாடாய் படுத்துகிறது. மார்பில் சளி சேர்வதால் சுவாசிப்பதில் சிரமம், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
கபம் நமது உடலின் இயற்கையான அங்கம் தான். இது பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகிறது. ஆனால், கபம் அல்லது சளி, உடலில் அளவிற்கு அதிகமாகும் போது அல்லது மார்பில் சளி சேரும் போது, அது சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மார்பில் சேரும் சளியை வெளியேற்ற விலையுயர்ந்த மருந்துகள் அல்லது சிகிச்சை எதுவும் தேவையில்லை. வீட்டு வைத்தியம் மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
சளியை அகற்ற உதவும் மிகச்சிறந்த கஷாயம் பற்றி தெரிந்து கொள்வோம். இதை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் சளித் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கஷாயம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
1. துளசி இலைகள்: 10-12
2. இஞ்சி: 1 அங்குல துண்டு
3. மஞ்சள் பொடி அல்லது துருவிய பசுமஞ்சள்: 1/2 தேக்கரண்டி
4. கருமிளகு: 4-5 தானியங்கள்
5. தேன்: 1 தேக்கரண்டி
6. தண்ணீர்: 2 கப்
கஷாயம் தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றவும். அதனுடன் துளசி இலைகள், துருவிய இஞ்சி, மஞ்சள் மற்றும் கருமிளகு சேர்க்கவும். இந்த கலவையை 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக குறைய வேண்டும். பின்னர் அதை வடிகட்டி சிறிது ஆறிய பிறகு அதனுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்க்கவும். இப்போது ஆயுர்வேத, கஷாயம் தயார்.
மேலும் படிக்க | எச்சரிக்கை... மூளையில் ரத்த உறவை ஏற்படுத்தும்... ஆபத்தான சில பழக்கங்கள்
கஷாயம் அருந்தும் முறை:
கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் மற்றும் இரவு தூங்கும் முன் குடிக்கவும். 5-7 நாட்களுக்கு தொடர்ந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பல.
1. சுவாச பிரச்சனையில் இருந்து நிவாரணம்: மஞ்சள் மற்றும் கருமிளகு சுவாச மண்டலத்தில் மற்றூம் மார்பில் ஏற்படும் இறுக்கத்தையும், அசௌகரியத்தையும் போக்குகிறது.
2. தொண்டை வலியிலிருந்து நிவாரணம்: இந்த கஷாயம் தொண்டை புண் மற்றும் இருமலையும் போக்குகிறது.
3. சளியை வெளியேற்ற உதவும்: துளசி மற்றும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சளியை உருக்கி மார்பில் இருந்து வெளியேற்றும்.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது: தேன் மற்றும் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
கஷாயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில், ஏதேனும் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், அதை உட்கொள்ள வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பிற வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
(பொறுப்பு துறப்பு : வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் பொதுவான தகவல்களின் உதவியை எடுத்துள்ளோம். உங்கள் உடல்நலம் தொடர்பான எதையும் நீங்கள் எங்கும் படித்தால், அதை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | கண்களுக்கு கீழே உருவாகும் தழும்பு... அச்சப்பட வேண்டாம் - ஈஸியாக சரி செய்யலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ