புத்தாண்டு ராசிபலன்: 2025 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்... சனி, குரு அருளால் அற்புதமான ராஜயோகம் அமையும்

Sani Peyarchi Palangal: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு 2025 பிறக்கவுள்ளது. இந்த ஆண்டில் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sani Peyarchi, Guru Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஆண்டாக பார்கப்படுகின்றது. இந்த ஆண்டில் பெரிய கிரகங்களான சனி பகவானும் குரு பகவானும் பெயர்ச்சி ஆகிறார்கள். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு இது ஒரு பொறகாலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /11

நீதியின் கடவுள் என போற்றப்படும் சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் கிரகமாக உள்ளார். அவர் தற்போது கும்ப ராசியில் உள்ளார். சனி மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டின் மிக முக்கியமான பெயர்ச்சியாக பார்க்கப்படுகின்றது.

2 /11

கிரகங்களில் முக்கியமான சுப கிரகமாக இருப்பவர் குரு பகவான். அவர் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். குரு, 2025 மே மாதத்தில் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியும் 2025 ஆம் ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது.

3 /11

2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய ஜோதிட நிகழ்வுகள் நடக்கவுள்ளன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.  

4 /11

மேஷம்:  சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டில் மங்களகரமான செய்திகளை அளிக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும். திருமணம் ஆனவர்களின் திருமண வாழ்வில் இனிமை இருக்கும். சமூகத்தில் மரியாதை கூடும்.

5 /11

ரிஷபம்: சனி பகவானின் அருளால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பல வித நற்பலன்கள் கிடைக்கும் ஆண்டாக இருக்கும்.தடைகள் அனைத்தும் விலகும். குரு பகவானின் அருளால் செல்வம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த ஆண்டு புதிய தொழில்களை தொடங்கலாம். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும்.

6 /11

மகரம்: 2025 ஆம் ஆண்டு, மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவடைகிறது. அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். தடைப்பட்டிருந்த பணிகள் அனைத்தும் நிறைவேறும். மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொடர்ந்து இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

7 /11

கும்பம்: 2025 சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமான பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்து மக்களின் பணப் பிரச்சனைகள் நீங்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். மீன ராசிக்கு சனி மாறும்போது கும்ப ராசிக்காரர்களுக்கு 2025ம் ஆண்டு சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.

8 /11

மீனம்: 2025 ஆம் ஆண்டு மீன ராசியில் சனிபகவானின் ஏழரை சனியின் நடுப்பகுதி மார்ச் 29-ம் தேதி முதல் தொடங்குகிறது. மீன ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்காது. ஆனால் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் இருக்கும், குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

9 /11

சனி பகவானின் அருள் பெற தினமும், சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். இவை தவிர ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்பவர்களையும் சனி பகவான் சோதிப்பதில்லை.  

10 /11

குரு பகவானின் அருள் பெற, 'குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஷ்வர, குரு சாட்சாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ' என்ற குரு ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.  

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.