முக-முடியை ஷேவ் செய்யும் பெண்ணா நீங்கள்? ‘இந்த’ 5 விஷயத்தில் கவனமா இருங்க!

Face Shaving Tips : பெண்கள் பலர் தங்கள் முகத்தில் உள்ள முடியை ஷேவ் செய்ய ரேசரை பயன்படுத்துவர். இதை பயன்படுத்தும் முன், சில விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொள்வதும் அவசியம் ஆகும்.

Written by - Yuvashree | Last Updated : Dec 26, 2024, 05:06 PM IST
  • முடியை ஷேவ் செய்யும் பெண்கள் கவனத்திற்கு!
  • அதை செய்யும் முன்பு இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..
  • இல்லன்னா பிரச்சனை..
முக-முடியை ஷேவ் செய்யும் பெண்ணா நீங்கள்? ‘இந்த’ 5 விஷயத்தில் கவனமா இருங்க! title=

Face Shaving Tips : அனைவருக்கும் உடலின் வெவ்வேறு பாகங்களில் முடி வளருவது என்பது சகஜம். ஆண்கள், தங்கள் தாடி, மீசையை எடுக்க ஷேவர் பயன்படுத்துவர். பெண்களுக்கும் வாய்க்கு மேல் மற்றும் முகத்தின் இரு பக்கங்களில் இருக்கும் முடியையும் எடுக்க அதற்கென்று தனியாக இருக்கும் ஷேவர்களை பயன்படுத்துவர். அப்படி இல்லையென்றால் அழகு நிலையத்திற்கு சென்று வேக்ஸிங் அல்லது த்ரெட்டிங் செய்து கொள்வர்.

பெரும்பாலானோருக்கு அடிக்கடி பார்லருக்கு சென்று முகத்தில் இருக்கும் முடியை எடுக்க நேரமில்லை. இதனால் ரேசர் வைத்தே முடியை எடுத்து விடுகின்றனர். இப்படி செய்வதால் பெரிய பிரச்சனை ஒன்றும் வந்துவிடப்போவதில்லை என்றாலும் சில விஷயங்களை கண்டிப்பாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் முடியில் வரும் சிறுசிறு பிரச்சனைகளை நிறுத்தலாம். 

உங்கள் முகத்தை சரியாக சுத்தம் செய்ய வேண்டும்: 

ஷேவ் செய்வதற்கு முன்னர், உங்கள் முகத்தை நன்றாக கழுவி, சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். இது, உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்கை அகற்ற உதவும். மேலும், மேக்-அப், எண்ணெய் வடிதல் ஆகியவற்றையும் நீக்கும். இப்படி சுத்தபடுத்துவதால், உங்கள் முகத்தை எந்த சிரமமும் இன்றி, மிருதுவாக ஷேவ் செய்யலாம். இதற்கென்று க்லென்சர் இருக்கிறது. சுத்தம் செய்யும் போது வெந்நீர் வைத்து சுத்தப்படுத்துதல் நல்லது. தண்ணீர் ஊற்றி கழுவிய பின்பு ஈரமற்ற டவலை வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

எண்ணெய்: 

பலர், ஷேவ் செய்யும் போது சோப் அல்லது ஃபேஸ் வாஷை போட்டு முகத்தில் தேய்த்து, அதை வைத்து ஷேவ் செய்வர். இதனால் பல இடங்களில் வெள்ளை படியும், அந்த இடங்களில் உள்ள முடியை நீக்க முடியாமல் போய் விடும். எனவெ, மிருதுவாகவும் மென்மையாகவும் ஷேவ் செய்ய, கற்றாழை ஜெல் அல்லது முகத்திற்கென்றிருக்கும் எண்ணெயை உபயோகிக்கலாம். இது, நீங்கள் தவறுதலாக முகத்தில் வெட்டு போட்டு கொள்வதையும் தவிர்க்க உதவும்.

குறுகலாக ஷேவ் செய்யவும்: 

முகத்தில் இருக்கும் முடியை ஷேவ் செய்யும் போது சிறு சிறு அளவாக, குறுகலாக மட்டும் ஷேவ் செய்ய வேண்டும். மேலும், எந்த இடத்தில் ஷேவ் செய்கிறீர்களோ அந்த இடத்தை மேடாக தனியே தெரியும் படி தோலை இறுக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு உதட்டுக்கு மேல் ஷேவ் செய்கிறீர்கள் என்றால், அங்கு, நாக்கை உள்ளே வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது நீங்கள் ஸ்மூத் ஆக ஷேவ் செய்யலாம்.

சுத்தம் செய்யுங்கள்: 

ஷேவ் செய்ய ஆரம்பிக்கும் முன்பு ஒரு முறை ஷேவரை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஷேவ் செய்ய ஆரம்பித்து, முடி அதில் படர ஆரம்பிக்கும் போது மீண்டும் அதை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் முடியை முழுமையாக நீக்கலாம்.

மாய்ஸ்சுரைசர்:

பொதுவாக அனைவரும் குளித்துவிட்டு வந்த பிறகே மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பது நல்லது. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் நம் சருமம் அதிகமாக வறண்டு போக வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க கண்டிப்பாக மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். உங்கள் சருமத்திற்கு எந்த மாதிரியான மாய்ஸ்சுரைசர் சரியாக இருக்கும் என தேர்ந்தெடுத்து வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஷேவ் செய்து முடித்த பின், அந்த மாய்ஸ்சுரைசரை எடுத்து எங்கெல்லாம் ஷேவ் செய்தீர்களோ அங்கெல்லாம் தடவ வேண்டும்.

முடியை நீக்கிய பிறகு, அந்த இடங்களில் இருக்கும் சிறு துளைகளில் ஈரப்பதத்தை நிரப்ப உதவும். சருமம் சேதமாவதில் இருந்து பாதுகாக்கவும் சிவந்து போவதை தடுக்கவும் இது உதவும். இதை தேய்த்தால் ஷேவிங்கிற்கு பிறகு சரும எரிச்சலை தடுக்கலாம். சீக்கிரமாக முடி வளரச்செய்யாமலும் இது தடுக்குமாம். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News