இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். பட்ஜெட் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும், இஎம்ஐ கடன் வசதி கிடைப்பதால், எளிய மற்றும் நடுத்தர மக்களும், பிரீமியம் போன்கள் பக்கமாக தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர். அந்த வகையில் ஐபோன் என்பது பலர் வாங்க நினைக்கும் பிரீமியம் ஃபோன்களில் ஒன்று.
பண்டிகை காலங்களில், இ-காமர்ஸ் தளங்கள் பல விதமான ஆஃபர்களை வழங்குகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த விலையில், பல பொருட்களை வாங்கலாம். அந்த வகையில், உங்களின் ஐபோன் கனவை நிறைவேற்றிக் கொள்ள அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) ஆப்பிள் ஐபோன் 15 (128 ஜிபி, கருப்பு வண்ண மாடல்) மீது ஒரு அற்புதமான சலுகையை வழங்கியுள்ளது. சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் ஐபோனை ரூ.26,999 என்ற விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு வந்துள்ளது.
கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் ஆப்பிளின் 'Wanderlust' நிகழ்வில் ரூ.69,990 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற சலுகைகளை முழுமையாக பெற்றால், iPhone 15 மாடல் போனை முன்பை விட மிக மலிவாக வாங்கலாம்.
iPhone 15 கிடைக்கும் தள்ளுபடி விபரம்
முன்னதாக ஐபோன் 15 போனின் விலை ரூ.69,990 ஆக இருந்தது. ஆனால் தற்போது 16% தள்ளுபடி கிடைக்கிறது, இதன் காரணமாக அதன் விலை ரூ.58,499 ஆக குறைந்துள்ளது. விலையை மேலும் குறைக்க விரும்பினால், எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எக்ஸ்சேன்ஞ் செய்யும் போனின் நிலையைப் பொறுத்து, ரூ.31,500 வரை உயரும். அந்த வகையில், நீங்கள் இந்த ஃபிளாக்ஷிப் போனை இதுவரை இல்லாத குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது ரூ.26,999 என்ற விலையில் வாங்க வாய்ப்பு. உதாரணமாக, உங்கள் பழைய ஐபோன் 14 பிளஸ் ஐ எக்ஸ்சேஞ்ச் செய்தால், இந்த போனை மிக குறைந்த விலையில் வாங்கலாம்.
மேலும் படிக்க | குளிர்காலத்தில் பிளிப்கார்ட் அட்டகாசம்: வெறும் ரூ.3499 -க்கு அசத்தலான கீசர்கள்
ஐபோன் 15: அம்சங்கள்
ஐபோன் 15 ஆனது 6.1 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இது 2000 நிட்கள் வரை உச்ச பிரகாசத்தை வழங்குகிறது. 48MP முதன்மை கேமரா, குவாட்-பிக்சல் சென்சார் மூலம் கூர்மையான, உயர்-தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களைப் பிடிக்கிறது மற்றும் மேம்பட்ட ஆட்டோஃபோகஸ் அம்சத்தையும் கொண்டுள்ளது. யுனிவர்சல் USB-C இணைப்பு சாதனங்களுக்கு இடையே சார்ஜிங் மற்றும் தரவு பரிமாற்றத்தை எளிதாக்குகிறது.
பிளிப்கார்டின் 14 நிமிட டெலிவரி சேவை
Flipkart சமீபத்தில் 'மினிட்ஸ்' என்ற புதிய டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் உங்கள் புதிய ஐபோனை 14 நிமிடங்களில் பெறலாம். எனினும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் மட்டுமே விரைவில் டெலிவரி செய்யும் வசதி கிடைக்கும் என்று பிளிப்கார்ட் கூறுகிறது. அதோடு, இந்த எக்ஸ்பிரஸ் டெலிவரியில் டிஜிட்டல் பாதுகாப்புத் திட்டங்கள் அல்லது பரிமாற்றங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கபட்ட அனைத்து விவரங்களும் முற்றிலும் தகவல் சார்ந்தது. Zee Tamil News நெட்வொர்க் மற்றும் அதன் எழுத்தாளர்கள் சலுகைகள், தள்ளுபடிகள் அல்லது தயாரிப்புகளை உறுதிப்படுத்தவோ அங்கீகரிக்கவோ இல்லை. சலுகைகளை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும். ஜீ நிறுவனம் அல்லது அதன் எழுத்தாளர்கள் நிதி அல்லது பொருள் இழப்புகளுக்கு பொறுப்பேற்க மாட்டார்கள்)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ