உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

Last Updated : Dec 9, 2019, 08:39 AM IST
உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் title=

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஒரு வழியாக பல மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 9ம் தேதியான இன்று தொடங்குகிறது. வேட்புமனுக்களை டிசம்பர் 16 வரை தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் டிசம்பர் 19 என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும். தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவியேற்பு ஜனவரி 6ம் தேதியில் நடைபெறும்.

இந்நிலையில் இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

Trending News