போலி பாதாமை கண்டறியும் வழிமுறைகள் இத்தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் பாதாமை மிகவும் சத்து என நினைத்து தினமும் உட்கொள்வது உண்டு. ஆனால் அது பாதாம் தானா? பாதாம் போல் வேறு ஏதும் சாயம் பூசப்பட்ட விதையா என்பது தெரியாது. அது தெரியாமல் நாம் அதை உட்கொண்டு வருகிறோம். எனவே இத்தொகுப்பில் போலி பாதாமை கண்டறிவது எப்படி? என்பதை தெரிந்துகொள்வோம்.
தரக்குறைவான பாதாம் அல்லது பாதாமை அல்லாத பீச் விதகைகளை சாயம் பூசி வற்பனை செய்து வருவது அதிகரித்து வருகிறது. தரமான பாதாமை கண்டறிய சில வழிகள் உள்ளன.
ஒரிஜினல் பாதாமானது ஒருபக்கம் அரை வட்டமாகவும், மறுபக்கம் கூர்மையான முனையுடனும் இருக்கும். ஆனால் போலியான பாதாம் சரியான வடிவில் இருக்காது. பளபளப்பாக இருக்கும்.
பாதாமின் மேற்புறத்தோல் கொஞ்சம் சொரசொரப்பாக இருக்கும். ஆனால் போலி பாதாம் மேற்புறத்தோல் மிகவும் வழுவழுப்பாக இருக்கும் அல்லது மொழுகு பூசப்பட்டிருக்கலாம்.
ஒரிஜினல் பாதாம் இயற்கையான விதையின் சுவையுடன் இருக்கும். ஆனால் போலி பாதாம் சுவையற்றதாக இருப்பதுடன் அதிக இனிப்பாக இருக்கும்.
ஒரிஜினல் பாதாம் லேசான பழுப்பு அல்லது பீச் நிறத்தில் இருக்கும். ஆனால் போலி பாதாம் இயற்கைக்கு மாறான நிறத்தில் இருக்கும். காரணம், வேதிப் பொருட்களால் நிறமேற்றப்படுவதுதான். அதை வெள்ளை துணியில் தேய்த்துப் பார்பதன் மூலம் கண்டறியலாம்.
அதேபோல் பாதாமை தண்ணீரில் போடும்போது பாதாமின் மேலே ஏதாவது பூசப்பட்டிருந்தால் அது தண்ணீரில் மிதக்கும். ஆனால் நிஜமான பாதாம் விதை மூழ்கும். பாதாமில் நிறமேற்றப்பட்டிருந்தால் தண்ணீரில் நிறத்தை கலக்கும்.
மேற்கூறியவற்றின் படி இருக்கிறதா? என்பதை சோதனை செய்து வாங்குங்கள். அதேபோல் பொதுவாக பாதாம் போன்ற நட்ஸ்களின் விலை அதிகம் என்பதால், விலை அதிகமாக இருக்கும் பாதாம் ஒரிஜினல் என நம்ப வேண்டும். தரமானதா என்பதை சோதனை செய்து வாங்குங்கள்.