அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளில் தமிழ்நாட்டில் கோவில்களில் ராமர் பெயரில் பூஜைகள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வதந்தி பரப்பி வருவதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். தமிழக அரசின் இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
(@nsitharaman) January 21, 2024
மேலும் படிக்க | இந்துக்களின் எதிரி பாஜக, நீட் மற்றும் ஆளுநர் பதவி வேண்டாம்: திமுக இளைஞரணி தீர்மானம்
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " “தமிழகத்தில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். தமிழக அரசின் இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று எழுதியிருந்தார்.
(@PKSekarbabu) January 21, 2024
இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ராமர் கோயில்களில் வழக்கம்போலவே இன்று பூஜைகள் நடத்தப்படுகின்றன. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பஜனைகள், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எந்த தடையும் இல்லை" என்று கூறியுள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறுகையில், "தமிழ்நாட்டில் எழுச்சியுடன் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்பவே இந்த வதந்தி பரப்பப்படுகிறது. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச்செய்தியை உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது" என்று தெரிவித்துள்ளார். இந்த வதந்தி தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.
மேலும் படிக்க | கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை..! காவல்துறை விசாரணை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ