வெறும் வயிற்றில் தினமும் இந்த ஒரு ஜூஸ் மட்டும் குடிங்க..உங்கள் தலையில் வழுக்கையே விழாது!

கூந்தலை வலுவாக வைத்திருக்க உடலுக்கு ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாகத் தலையில் அதிகமானோருக்கு முன் வழுக்கை விழுகிறது. இதன் காரணம் உடலில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லையென்றால் வரலாம் அல்லது ஹோர்மோன் குறைவாக இருந்தாலும் வரலாம் என்று கூறப்படுகிறது. 

முன் வழுக்கை விழுதல் என்பது சிலருக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கும், வேறு சிலருக்கு திடீரென்று வரும். தலையில் வழுக்கை வராமல் இருக்க உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டும். மேலும் உங்கள் வழுக்கையைச் சரிசெய்யவும் மற்றும் வழுக்கை விழாமல் இருக்க இந்த ஜூஸ் குடித்து வாருங்கள். நல்ல பலனும் உடல் ஆரோக்கியமும் பெறுவீர்கள்.

 

1 /8

ஆம்லா என்று சொல்லப்படும் நெல்லிக்காய் கூந்தலுக்குச் சிறந்த ஆரோக்கியத்தைப் பெற்றுத் தருகிறது. ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. 

2 /8

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது தலைமுடிகளைப் பலப்படுத்துகிறது. மேலும் முடி உதிர்வைக் குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

3 /8

நெல்லிக்காயில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இது தலைமுடிக்குச் சீரான இரத்த  ஓட்டத்தை எடுத்துச் செல்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

4 /8

நெல்லிக்காயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இவை தலையில் இருக்கும் பொடுகை நீக்குகிறது. மேலும் பொடுகு உருவாகுவதைத் தடுக்கிறது. கூந்தலுக்கு நல்ல பளபளப்பைப் பெற்றுத் தருகிறது.

5 /8

நெல்லிக்காய் தலைமுடியில் ஏற்படும் நரை முடிகள் வளர்வதைக் கணிசமாகத் தடுக்கிறது. மேலும்  அளவை சமன் செய்து ஆரோக்கியமான உச்சந்தலையை ஆதரிக்கிறது.

6 /8

நெல்லிக்காய் சாற்றைத் தினமும் ஒரு முறை எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தேன், வெல்லம் அல்லது சிறிது எலுமிச்சை சாறு போன்றவை சுவைக்குச் சேர்த்துச் சாப்பிடலாம்.

7 /8

நெல்லிக்காய் சாறு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். போதுமான அளவு மட்டுமே சாப்பிடுங்கள். அசிடிட்டி பிரச்சனைகள் உண்டாகும். இந்த பிரச்சனையுள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.  மேலும் ஏதேனும் தயக்கம் அல்லது சந்தேகம் இருந்தால் சரியான ஆலோசகரை அணுகிய பின்னரே உட்கொள்ளுங்கள்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.