இந்தி & ஆங்கிலத்தில் மட்டுமே அக்னி வீர் ஆட்சேர்ப்பு தேர்வு! அதிர்ச்சித் தகவல்

Agni Veer Recruitment Test Only in Hindi and English: அக்னி வீர் ஆட்சேர்ப்பு தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே எழுத்து தேர்வு எழுத வாய்ப்புள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 9, 2023, 08:36 PM IST
  • ராணுவ ஆட்சேர்ப்பு தேர்வு தமிழில் கிடையாது! அதிர்ச்சித் தகவல்
  • ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்துத் தேர்வு
  • இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் தேர்வு முகாம் குறித்த விளக்க கூட்டம்
இந்தி & ஆங்கிலத்தில் மட்டுமே அக்னி வீர் ஆட்சேர்ப்பு தேர்வு! அதிர்ச்சித் தகவல்  title=

அக்னி வீர் ஆட்சேர்ப்பு தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே எழுத்து தேர்வு எழுத வாய்ப்புள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் தேர்வு முகாம் குறித்த விளக்க கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் சென்னை தலைமையிட ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் எம்.கே. பாத்ரே செய்தியாளர்களை சந்தித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய ராணுவத்திற்கு 2023 - 24 ஆண்டிற்கான அக்னி வீர் திட்டத்திற்கு ஆட் சேர்க்கும் பணிக்கான விண்ணப்பங்கள் பதிவு துவங்கியுள்ளது,17 வயது முதல் 21 வயதுக்குள் உள்ள நபர்கள் இதற்கான இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம், விண்ணப்பதாரர்களுக்கு உதவ பல்வேறு ஆன்லைன் நடைமுறைகளும் மற்றும் பயிற்சி வீடியோக்களும் இத்தளத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, வேலூர் , திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை , கடலூர் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் வரும் மார்ச் 15 க்குள் ராணுவ ஆட்சேர்ப்பு இணைய தளத்தில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | Army Agniveer: ராணுவத்தில் பணிபுரிய ஆர்வமா? இந்தத் தகுதிகள் இருந்தால் அக்னிபாத் அக்னிவீரர் நீங்களே!

ஆட்சேர்ப்புக்காக இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெற உள்ளது. முதற்கட்டத் தேர்வில், தேர்வு மையங்களில் கணினி அடிப்படையில் ஆன எழுத்து தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வானவர்கள் உடற் தகுதி தேர்வு மற்றும் விளையாட்டு தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்றும்,இதற்கான கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு , ஐடிஐ மட்டும் டிப்ளமோ ஆகியவை கூடுதல் தகுதிகளாகும் இருக்கும்,

எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இடம்பெறும் என இயக்குனர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் ராணுவத்தில் இணைய விரும்பும் நிலையில் போதிய ஆங்கில அறிவு திறன் இருந்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும் என்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியை தற்போது வரை பள்ளி மாணவர்கள் கற்கவில்லை என்பதும் தெரிந்தும், இதுபோன்று இரண்டு மொழியில் மட்டுமே என்பது பெரும் வருத்தமளிக்கிறது.

மேலும் இதுவரை இது போன்ற மாணவர்கள் நேரடியாக கணினி மூலம் தேர்வை எழுதியதும் இல்லை என்பதும் இதனால் தேர்வில் தேர்ச்சி என்பது எவ்வாறு இருக்கும் என்பதை நாமே யூகித்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க: மொபைலில் சார்ஜ் விரைவில் காலியாகிறதா? இந்த ஆப்ஸ்லாம் உடனே டெலீட் பண்ணிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News