கோயம்புத்தூர்: வால்பாறையில் நடுமலை (Nadumalai River) ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வால்பாராயில் (Valparai) வசிக்கும் சுமார் 100 குடும்பங்களை, அங்கு உள்ள அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள மறுவாழ்வு மையத்திற்கு தற்காலிகமாக மாற்ற வருவாய் துறை திட்டமிட்டுள்ளது.
ஆற்றங்கரையில் உள்ள வாழைத்தோட்டம், தோபி காலனி மற்றும் கக்கன் காலனி ஆகிய இடங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வெள்ள எச்சரிக்கை (Flood Alert) விடுக்கப்பட்டுள்ளதாக வால்ப்பரை தாசில்தார் (Tahsildar) எஸ்.ராஜா தெரிவித்தார்.
ALSO READ | ‘தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம்
“பலத்த மழை (Heavy Rain) காரணமாக திங்கள்கிழமை காலை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்தது. இருப்பினும், மாலைக்குள் ஒரு அளவிற்கு குறைந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் குழு, காவல்துறை மற்றும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. வெள்ளப் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் 100 குடும்பங்களை தற்காலிக மறுவாழ்வு முகாம் மாற்ற தயாராக உள்ளன. மழையின் காரணமாக அரசு கலை கல்லூரியில் தற்காலிகமாக "மறுவாழ்வு முகாம்" அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் ஒரு சமூக சமையலறை அமைக்கப்பட்டுள்ளது என்றார் எஸ். ராஜா.
வால்பாறையில் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் அக்காமலை செக்டேம் அணை கனமழை காரணமாக ஏற்கனவே நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கடும் வெப்பத்தை தணிக்க வந்துவிட்டது பருவ மழை... எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?