வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் கட்டாய சோதனை, தனிமைப்படுத்தல் தேவை: HC-யில் மனு தாக்கல்

வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோதிக்கப்பட வேண்டும், அறிகுறி காணப்பட்டால், அவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2020, 11:23 AM IST
  • வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் கட்டாய பரிசோதனை தேவை என HC-யில் மனு.
  • ஏழு நாட்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தலும் கோரப்பட்டுள்ளது.
  • அரசுக்கு இது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கக்கோரி மனு.
வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் கட்டாய சோதனை, தனிமைப்படுத்தல் தேவை: HC-யில் மனு தாக்கல்  title=

சென்னை: வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் மற்றும் கப்பல்களில் வரும் அனைத்து பயணிகள் மற்றும் விமான மற்றும் குழு உறுப்பினர்களுக்கும் கட்டாய RT-PCR சோதனை செய்யப்பட வேண்டும் என்றும், அவைர்கள் அனைவரும் ஏழு நாட்களுக்கான சுய தனிமைப்படுத்தலில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் கொரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் இந்த செயல்முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிகுறியற்றவர்களும் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும், பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

வக்கீல் பி.ராம்குமார் ஆதித்யன் முன்வைத்த ஒரு பொது நலன் வழக்கு, இங்கிலாந்தில் (England) கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்ட நிலையில், வேறு நாட்டிலிருந்து வரும் பயணியும், இங்கிலாந்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று கூறினார். எனவே, எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளும் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்வது முக்கியம் என்றார் அவர்.

சிலருக்கு அறிகுறிகள் இருப்பதில்லை என்றும், நோய் இருப்பது தெரியவே சராசரியாக 5–6 நாட்கள் ஆகும் என்றும், சில சந்தர்ப்பங்களில் 14 நாட்கள் வரை ஆகிறது என்று கோரிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் கட்டாய பரிசோதனைக்கும் நிறுவன தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசாங்கத்திற்கு ஒரு வழிகாட்டுதலை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்திடம் (High Court) கோரப்பட்டுள்ளது என்றார் அவர்.

ALSO READ: புதிய COVID பழைய வைரஸுக்கு ஆபத்தானது; குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்!

அனைத்து பயணிகளும் பரிசோதிக்கப்பட வேண்டும், அறிகுறி காணப்பட்டால், அவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி ஆர் மகாதேவன் மற்றும் நீதிபதி அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

முன்னதாக, இங்கிலாந்தில் COVID-19 வைரசின் புதிய மற்றும் மிகவும் மாறுபட்ட வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சங்களுக்கு மத்தியில், தமிழக அரசு திங்களன்று மக்களுக்கு முகக்கவசங்களை கட்டாயமாகப் பயன்படுத்தும்படி வலியுறுத்தியுள்ளது. இது தொற்றுநோய்க்கு எதிரான ஒரு சிறந்த தடுப்பு வழிமுறையாக மாறியுள்ளது என்று அரசு தெரிவித்தது.

“வைரசின் இந்த புதிய மாறுபாடும் முகக்கவசம் அணியாததால்தான் பரவுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்” என்று ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொற்றுநோய் நிலை குறித்து நடந்த மாவட்ட மறுஆய்வுக் கூட்டத்தில் அவர் கூறினார். இப்போது வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி, மக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிவதுதான் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami).

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

தொற்று, சிகிச்சை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அவரது அரசு இதுவரை ரூ .7,544 கோடியை செலவிட்டுள்ளது. குடிநீர் வழங்குவதைத் தவிர, பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்ந்து கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. "இரத்த மாதிரிகள் சேகரிப்பதற்கும், முறையான சிகிச்சை அளிப்பதற்கும், நோய் பரவாமல் தடுப்பதற்கும் மொபைல் அலகுகள் ஈடுபட்டுள்ளன" என்று பழனிசாமி மேலும் கூறினார்.

ALSO READ: இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News