Men vs Women in India: முதன்முறையாக பெண்களை விட எண்ணிக்கையில் குறைந்த ஆண்கள்

நாட்டிலேயே முதன்முறையாக ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, நாடு முழுவதும் நவீன கருத்தடை முறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 25, 2021, 01:28 PM IST
  • இந்தியாவில் பெண்களை விட எண்ணிக்கையில் குறைந்த ஆண்கள்
  • முதன்முறையாக இந்தியாவில் பெண்களின் விகிதம் அதிகரிப்பு
  • நவீன கருத்தடை முறைகள் பயன்பாடு அதிகரித்ததுள்ளது
Men vs Women in India: முதன்முறையாக பெண்களை விட எண்ணிக்கையில் குறைந்த ஆண்கள் title=

புதுடெல்லி: நாட்டிலேயே முதன்முறையாக ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இந்தத் தகவலை, தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது நாட்டில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட  NFHS-5 தொடர்பான அறிக்கையில் பல விஷயங்கள் வெளியாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்களை புதன்கிழமையன்று மத்திய அரசு (Central Government) வெளியிட்டது.

நகரங்களை விட கிராமங்களில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளது
முன்னதாக, 2015-16 ஆம் ஆண்டிற்கான NFHS-4 தரவுகளின்படி, 1000 ஆண்களுக்கு 991 பெண்கள் இருந்தனர்.  தற்போது பிறக்கும் குழந்தைகளின் பாலின விகிதமும் மேம்பட்டுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பில், 1000:929 என்ற விகிதத்தில் ஆண் - பெண் குழந்தைகளின் விகிதம் இருந்தது. 

READ ALSO | பெண்கள் பாதுகாப்புக்கு புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம்: அமைச்சர் பி.கீதாஜீவன்

2015-16 ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். நகரங்களில் 1000 ஆண்களுக்கு 985 பெண்கள் என்ற விகிதமானது, கிராமங்களில் 1000 ஆண்களுக்கு 1037 பெண்கள் என்று உள்ளது. எனவே, நகரங்களை விட கிராமங்களின் பாலின விகிதம் சிறப்பாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

நாட்டில் 96.8 சதவீத வீடுகளுக்கு மின்சாரம் வசதி
நாடு முழுவதும் 78.6 சதவீத பெண்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை (Bank Account) இயக்குகின்றனர். 43.3 சதவீதம் பெண்களின் பெயரில் சில சொத்துக்கள் உள்ளன. 77.3 சதவீத பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமாக (Women Health) இருக்கின்றனர். அதே நேரத்தில், நாட்டில் 70.2 சதவீத மக்கள் சொந்தமாக கழிப்பறை வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

2015-16 ஆம் ஆண்டில், 48.5% மக்களுக்கு மட்டுமே தங்களுக்கான சொந்த நவீன கழிப்பறைகளைக் கொண்டுள்ளனர். நாட்டில் 96.8 சதவீத வீடுகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

READ ALSO | இலவச ரேஷன் திட்டம் 2022 மார்ச் வரை நீட்டிப்பு: மத்திய அரசு

இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் ((Total Fertility Rate (TFR)) 2.2 லிருந்து 2 ஆக குறைந்துள்ளது. NITI ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), டாக்டர். வினோத் குமார் பால் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் செயலர் ராஜேஷ் பூஷன் ஆகியோர், இந்தியா மற்றும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மக்கள் தொகை, இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியம், குடும்ப நலம், ஊட்டச்சத்து மற்றும் பிற முக்கிய குறிகாட்டிகளை வழங்கினார்கள்.

நாடு முழுவதும் நவீன கருத்தடை முறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பதை கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. கணக்கெடுப்பின் அடிப்படையில், 12-23 மாத குழந்தைகளிடையே பல்வேறு நோய்களைத் தடுப்பதற்கான முழுமையான தடுப்பூசி பிரச்சாரத்தில் அகில இந்திய அளவில் 62 சதவீதத்திலிருந்து 76 சதவீதமாக கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

14இல் 11 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 12 முதல் 23 மாதங்கள் வரையிலான குழந்தைகளில் நான்கில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் முழுமையாக நோய்த்தடுப்பு பாதுகாப்புகளுக்கான தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். ஒடிசாவில் குழந்தைகளுக்கு நோய் தடுப்பு பாதுகாப்பு 90 சதவீதம் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இது நாட்டின் பிற மாநிலங்களைவிட அதிகபட்சமானது என்பது குறிப்பிடத்தக்கது.

READ ALSO | பைப்புல தண்ணி வருமா? இங்க பணமே வரும்!! அதிகாரிகளை அசர வைத்த தகிடுதத்தம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News