ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற தொடங்கினார். அதிமுகவின் தென்னரசு ஏற்கனவே அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், ஒரு சுற்றுகளில் கூட முன்னிலை பெறவில்லை. அனைத்து சுற்றுகளிலும் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்த இளங்கோவன் 1,10, 556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க | இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அவருக்கு கடும் போட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் தென்னரசு 43, 981 வாக்குகளை மட்டுமே பெற்றார். முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவைக்குள் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக அவர் செல்ல இருக்கிறார். வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மிகப்பெரிய வெற்றிக்கு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் காரணம் என்றார். இந்த வெற்றிக்கு உழைத்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அவர் நன்றியை தெரிவித்தார்.
அதேநேரத்தில் இந்த வெற்றியை தான் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உருக்கமாக கூறினார். அவரது மகன் திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மற்றும் அதிமுகவைத் தொடர்ந்து 3வது இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்தது. அந்த கட்சியின் வேட்பாளர் மேனகா 10,804 வாக்குகளை பெற்றார். விஜயகாந்தின் தேமுதிக 1,177 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தது.
மேலும் படிக்க | பட்டாசு மற்றும் இனிப்பு: கொண்டாட்டத்தில் திமுக கூட்டணி; ஒதுங்கிய அதிமுக
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ