ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ராயன் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை திமுக சார்பு அணி நிர்வாகிகளிடையே அறிமுகபடுத்தப்பட்டு தேர்தலில் வக்காளர்களை சந்தித்து எவ்வாறு வாக்கு சேகரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நிர்வாகிகளிடையே பேசிய அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர், தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மகளிருக்கான இலவச பேருந்து, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ஒரு ரூபாய் கூட வழங்காத ஒன்றிய அரசு தமிழகத்தையும் தமிழக மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பாஜவின் அதிகார ஆட்சியை விரட்ட இந்திய கூட்டணி அமைத்து முதல்வர் வழி நடத்துகிறார். முதல்வர் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என எண்ணி கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலில் பணியாற்றி திருப்பூர் நாடளுமன்ற தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் பெற்றதில் அந்தியூர் சட்டமன்ற தொகுதி என்பதற்கிணங்க வெற்றி பெற உழைக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனையடுத்து திருப்பூர் நாடளுமன்ற தொகுதி உறுப்பினரும் வேட்பாளருமான கே.சுப்ராயன் பேசுகையில், பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மலைபாம்பிடம் மான் சிக்குவது போல இந்திய ஜனநாயகம் சிக்கி சீரழிந்து கொண்டுள்ளது. பாஜகவிற்கு பாடம் கற்பிக்கும் ஆர்எஸ்எஸ் என்ற கட்டு விரியன் பாம்பு கூட்டம் ஜனநாயகத்தை நிராகரிக்க வேண்டும் என்று கற்று கொடுத்துள்ளார்கள். எனவே பிரதமர் மோடி ஜனநாயகத்தை கைபற்றி பயாஸ்கோப் படம் காட்டுவது போல் வலம் வருகிறார். தேர்தல் நெருங்கியதும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வராத பிரதமர் மோடி தற்போது 7 தடவை வந்தாலும் சரி 100தடவை வந்தாலும் சரி தமிழகத்தில் பாஜக மண்ணை கவ்வும் காளை மாடு எப்படி பால் கறக்காதோ அதுபோல், தமிழகத்தில் தாமரை கரை ஏறாது அதற்கு காரணம் திராவிட முன்னேற்ற கழகம். தற்போதைய சூழலில் பாஜக ரவுடி கும்பல்களை பல்வேறு குழுக்காளாக பிரித்து அனுப்பி தமிழகத்தில் ஏதாவது ஒரு சதிசெயலை செய்து அதிகாரத்தை கைபற்ற நினைக்கின்றனர்.
அதற்கு இங்குள்ள அடங்காத ஆடு குறைந்த பட்ச அரசியல் நெறி தெரியாத அண்ணாமலை பணபலம், அதிகாரம் என்னும் கள்ளை குடித்து விட்டு தலைகால் தெரியாமல் ஆடுகிறார். தமிழகத்தில் பாஜகவின் பணபலத்தையும், அதகாரத்தையும் சேர்த்து முறியடிக்கும் சாரதியாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். தமிழகத்தில் பாஜக அதிகாரத்தை கள்ளதனமாக கைபற்ற நினைப்பவர்களுக்கு பல்நொருங்கி விடும் சதை கிடைக்காது. திராவிட நெருப்பு பாஜகவை அழித்து விடும் தமிழகத்தில் பாஜக என்றைக்குமே வெற்றி பெற இயலாது. தமிழகத்தில் பாஜக பிசாசை விரட்டவும் டெல்லி அதிகாரத்திலிருந்து விரட்டுவதற்கான தேர்தல் தான். இந்த தேர்தல் டெல்லியில் மீண்டும் அதிகாரத்தை கைபற்றதான். பாஜக தமிழகத்தை குறிவைத்துள்ளது அதற்கு இந்த தேர்தல் மட்டுமல்ல வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க | Thangar Bachan: பாமக வேட்பாளர்கள் பட்டியல்-கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ