தத்துக்கொடுத்த பெண் திரும்பி வந்தார்: திக்குமுக்காடிப் போன தாய், பாசத்தில் திளைத்த மகள்

23 வருடங்கள் கழித்து தன்னை ஈன்றெடுத்த தாயாரை கண்டு அமுதவல்லி ஒவ்வொரு கணமும் தாய் பாசத்தில் மூழ்கிப்போகிறார்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 28, 2022, 01:50 PM IST
  • 23 வருடங்களுக்கு முன்னால் தத்துக்கொடுக்கப்பட்ட பெண் தாயைக் காண அயல் நாட்டிலிருந்து திரும்பி வந்தார்.
  • அம்மாவிடம் சரளமாக தமிழில் பேச முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மகள்.
  • தன் வயிற்றில் பிறந்த மகளிடம் ஒரு வாரத்தை கூட பேசி மகிழ்ச்சியடைய முடியவில்லையே என்ற கவலையில் தாய்.
தத்துக்கொடுத்த பெண் திரும்பி வந்தார்: திக்குமுக்காடிப் போன தாய், பாசத்தில் திளைத்த மகள் title=

23 வருடங்களுக்கு முன்னால் தத்துக்கொடுக்கப்பட்ட பெண் தாயைக் காண அயல் நாட்டிலிருந்து திரும்பி வந்த சம்பவம் அந்த குடும்பத்தை மட்டுமல்லாமல், உறவினர்கள், ஊர் மக்கள் என அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. 

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே ஜருகு என்ற பகுதியில் வசித்த ரங்கநாதன் அமுதா தம்பதியருக்கு கடந்த 1996 ஆம் ஆண்டு முதலில் ஒரு பெண் குழந்தைகள் பிறந்தது. பின்பு பல வருடம் கழித்து மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இதனிடையே ரங்கநாதன்  வேலைக்கு செல்லாமல் சாராயம் குடித்து ஊதாரியாக சுற்றி திரிந்துள்ளார். இதனால் அமுதா இரண்டு பெண் குழந்தைகளை காப்பாற்ற முடியாது என எண்ணி இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் கிறிஸ்தவ மிஷனரி நிறுவனத்திற்கு தத்துக்கு கொடுத்து விட்டார். 

அந்த தனியார் கிறிஸ்தவ மிஷனரி நிறுவனத்தில் அந்த குழந்தை வளர்ந்து வந்தது. சில வருடங்களுக்கு பின் உடல்நல குறைவால் ரங்கநாதன் இறந்து விட்டார். இதற்கிடையில், ஜெர்மனி நாட்டை அடுத்துள்ள நெதர்லாந்து நாட்டை சேர்ந்த போய்ட் (Piet) – அகீதா (Ageetha) தம்பதியர் அந்த பெண் குழந்தையை தத்துக்கு எடுத்து அமுதவல்லி என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். 

இந்த நிலையில் 23வயதை அடைந்த பெண் குழந்தை அம்மாவும் அப்பாவும் சிகப்பாக இருக்க தான் மட்டும் மாநிறமாக இருக்கும் காரணத்தை அறிய ஆவல் கொண்டார். மேலும் அதே நெதர்லாந்து தாய் தந்தைக்கு பிறந்திருக்கும் தங்கையும் சிகப்பாக உள்ளார் என சந்தேகப்பட்டு பெற்றோரிடம் இதற்கான விளக்கம் கேட்டார். 

ALSO READ | தமிழகத்தில் ஊரடங்கு ரத்து, பள்ளிகள் திறப்பு - முழுவிவரம் இதோ..! 

அமுதவல்லி தொந்தரவு தாங்க முடியாமல், அவரை இந்தியாவில் உள்ள தமிழகத்தில் தத்து எடுத்து வளர்த்து வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். இதனால் தன்னை ஈன்றெடுத்த தாயை காண வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அதிகரித்தது. பலமுறை இது குறித்து தனது வளர்ப்பு பெற்றோரிடம் முறையிட்டு, ஒருவழியாக அவர்களது சம்மதத்துடன் இந்தியாவிற்கு வந்துள்ளார். 

முதலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனது தந்தை ஊரான ஜருகுக்கு சென்றுள்ளார். அங்கு, தனது தந்தை இறந்துவிட்டதையும், தனது தாய்,  சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள பூசாரிப்பட்டி இந்திரா நகர் பகுதியில் இருந்த, பாட்டி வீட்டுக்கு சென்று விட்டதையும் அறிந்தார். 

திடீரென அவர் அங்கு சென்றதும், அவரது தாயும், மற்ற உறவினர்களும் பெரும் ஆச்சரியத்திற்கு ஆளாகினார்கள். ஆசையுடன் அவரை வரவேற்று, அவருக்கு பல வித அலங்காரங்களை செய்து விட்டு, தமிழ் கலாச்சாரங்களை சொல்லி கொடுத்து, கேக் வெட்டி கொண்டாடினர் அவரது உறவினர். 

மேலும் 23வருடம் கழித்து தன்னை ஈன்றெடுத்த தாயாரை கண்டு அமுதவல்லி ஒவ்வொரு கணமும் தாய் பாசத்தில் மூழ்கிப்போகிறார். அம்மாவிடம் சரளமாக தமிழில் பேச முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மகளும், தன் வயிற்றில் பிறந்த மகளிடம் ஒரு வாரத்தை கூட பேசி மகிழ்ச்சியடைய முடியவில்லையே என்ற கவலையில் தாயும், ஊமை பாஷையில் பேசிக்கொண்டு மகிழ்ச்சியை பரிமாற்றிக்கொள்வதைக் கண்டு உறவினர்களுக்கு வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 

ALSO READ | "உல்லாச விருந்து" மயங்கிய அரசியல் தலைவர்கள் வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News