‘ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ரன்’ மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க சிறப்பு திட்டம் - டிஜிபி சைலேந்திர பாபு

DGP Sylendra Babu: கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தகைளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 8, 2023, 11:20 AM IST
  • 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க திட்டம்.
  • ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ரன் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
‘ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ரன்’ மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க சிறப்பு திட்டம் - டிஜிபி சைலேந்திர பாபு title=

தமிழ்நாட்டில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஏராளமான குழந்தைகள் மாயமாகினர். இவர்கள் குறித்த விவரங்கள் மற்றும் இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல்கள் என எதுவுமே குழந்தைகளின் பெற்றோருக்கு தெரியாமல் இருக்கிறது. இதையொட்டி, இப்படி காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடிப்பதற்காக, டிஜிபி சைலேந்திர பாபு புதிய நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார். 

“ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ரன்..”

கடந்த 10 ஆண்டுகளில் மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ரன் (Operation Missing Children)என்ற பெயரில் புதிய திட்டம் தமிழக காவல்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம், குழந்தைகள் நலக்குழுக்களின் உதவியோடி மாயமான குழந்தைகளை மீட்கும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட உள்ளது. 

மேலும் படிக்க | அஜித் மச்சானுடன் நெருக்கம் காட்டிய யாஷிகா..விளக்கம் கொடுத்த நடிகையின் தாய்!

சைலேந்திர பாபு உத்தரவு:

ஆப்ரேஷ்ன் மிஸ்ஸிங் சில்ரன் திட்டத்தின்படி, டிஜிபி சைலேந்திர பாபு, காணாமல் போன குழந்தைகளை மீட்கும் பொருட்டு ஒரு சில முக்கிய உத்தரவுகளை மாநகர காவல்துறையினருக்கு பிறப்பித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளின் பட்டியைலை வைத்து சிறப்பு தணிக்கை மேற்கொள்ளுமாறு  மாநகர் கமிஷ்னர்கள் மற்றும் எஸ்.பிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

சிறப்பு முயற்சி:

10 ஆண்டுகளில் கண்டுபிடிக்க முடியாத குழந்தைகளின் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ள சைலேந்திர பாபு அக்குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கவும் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களின் உதவியுடன், கூடுதல் காவல்கண்காணிப்பாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் குழந்தைகளை கண்டுபிடிக்கும் திட்டம் செய்ல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாயமான குழந்தைகளை விரைவாக கண்டறிந்து அவர்களை அவரவர் பெற்றோர் இடத்தில் ஒப்படைக்க, அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் தனித்தனி சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் அறிவுருத்தப்பட்டுள்லது.  

ஜூன் 12க்குள் அறிக்கை தாக்கல்..

சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலக்குழுமங்கள் ஆகியவற்றின் உதவியுடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை 24 மணி நேரத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதையடுத்து, முழுவதுமாக ஒருங்கினைக்கப்பட்ட அறிக்கை, ஜூன் 12 ஆம் தேதிக்குள் (திங்கள்) தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்தர பாபு, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

தகுந்த சன்மானம்..

மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்கும் இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையை கச்சிதமாக நிறைவேற்றும் காவல்துரை ஆணையர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு கடைசியில் அவர்களுக்கேற்ற தகுந்த சன்மானம் அளிக்கப்படும் என சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக, தமிழக அரசு எடுத்துள்ள இந்த புது முயற்சி, பலரால் பாரட்டப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | கலகலப்பான காதல்.. ஹரிஷ் கல்யாணின் 'எல்ஜிஎம்' டீசர் வெளியானது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News