Flipkart Republic Day Sale: அற்புதமான சலுகைகளுடன் கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

Flipkart Republic Day Sale: ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் அனைவரும் இந்த சேலை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். இந்த விற்பனையில் ரியல்மி, மோட்டோரோலா மற்றும் ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 25, 2025, 04:37 PM IST
  • புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா?
  • இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  • பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்காக குடியரசு தின விற்பனையை கொண்டு வந்துள்ளது.
Flipkart Republic Day Sale: அற்புதமான சலுகைகளுடன் கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் title=

Flipkart Republic Day Sale: புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மலிவான விலையில், சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க இப்போது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்காக குடியரசு தின விற்பனையை கொண்டு வந்துள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.5500 வரை தள்ளுபடி பெறலாம். ஆகையால், ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் அனைவரும் இந்த சேலை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். இந்த விற்பனையில் ரியல்மி, மோட்டோரோலா மற்றும் ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 

இது தவிர, பழைய போனின் மதிப்பு மற்றும் நிலையைப் பொறுத்து கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ்களும் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்களில், 50MP வரை கேமரா மற்றும் 125W வரை வேகமான சார்ஜிங் போன்ற சிறந்த அம்சங்களும் கிடைக்கின்றன. பிளிப்கார்ட்டின் இந்த சேல் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Motorola Edge 50 Ultra: மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் விலை ரூ.49,999. ஆனால் வங்கி சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் இந்த போனை ரூ.5,000 தள்ளுபடியுடன் வாங்கலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். இதனுடன், ரூ.48,200 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது. இந்த போனில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் செல்ஃபி கேமரா உள்ளது. ப்ராசசராக, இது ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 4500mAh ஆகும். இது 125W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. 

மேலும் படிக்க | ஏர்டெல் vs ஜியோ: டேட்டா கிடையாது... வாய்ஸ்-ஒன்லி பிளானில் எது பெஸ்ட்?

Realme GT 6: ரியல்மீ ஜிடி 6

இந்த போனின் 16GB RAM மற்றும் 512GB சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.39,999. இது ரூ.2,000 வரை வங்கி தள்ளுபடியுடன் விற்பனையில் கிடைக்கிறது. மேலும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி அட்டை மூலம் இதில் 5% கேஷ்பேக் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ், இந்த போன் ரூ.39,200 வரை மலிவாக கிடைக்கும். இது 6000 நிட்களின் பீக் ப்ரைட்னஸ் கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் அதன் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமரா சிறப்பாக உள்ளன. பேட்டரி 5500mAh. இது 120W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. 

OPPO F27 5G: ஓப்போ எஃப்27 5ஜி

8GB RAM மற்றும் 128GB சேமிப்பகம் கொண்ட இந்த போன் ரூ.20,999க்கு கிடைக்கிறது. வங்கிச் சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் இதில் ரூ.2,000 தள்ளுபடியைப் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்க Flipkart Axis Bank கார்டு மூலம் பணம் செலுத்தினால், 5% கேஷ்பேக்கைப் பெற முடியும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் நீங்கள் ரூ.20,300 வரை பலனைப் பெறலாம். இந்த ஃபோனில் 50MP பிரைமரி கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமரா, 6.67-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே மற்றும் 45W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி ஆகியவை உள்ளன.

மேலும் படிக்க | Samsung Galaxy S25 வாங்கும் எண்னம் உள்ளதா? இந்த 4 அம்சங்களை பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News