6 மாதத்தில் 20 கிலோ குறைத்த கங்கனா ரனாவத்! பெரிய டயட் எல்லாம் இல்லை-சீக்ரெட் இதுதான்!

Kangana Ranaut Weight Loss Tips : பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கும் கங்கனா ரனாவத், தலைவி படத்தில் நடித்த போது உடல் எடை கூடினார். இதையடுத்து அடுத்த 6 மாதங்களிலேயே எடை குறைந்தார். அது எப்படி தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Jan 24, 2025, 01:18 PM IST
  • 6 மாதத்தில் 20 கிலோ எடை குறைந்த கங்கனா...
  • பெரிய டயட் எல்லாம் கிடையாது..
  • இது மட்டும்தான் சீக்ரெட்..
6 மாதத்தில் 20 கிலோ குறைத்த கங்கனா ரனாவத்! பெரிய டயட் எல்லாம் இல்லை-சீக்ரெட் இதுதான்! title=

Kangana Ranaut Weight Loss Tips : இந்தி திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர், கங்கனா ரனாவத். தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு வட இந்தியாவுக்கு சென்று பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்தார். சமீப காலமாக அரசியலிலும் களம் இறங்கி பிறரை ஆட்டம் காண வைத்துள்ளார். இவரது அரசியல் வாழ்க்கைக்கு திருப்பமுனையாக அல்லது உந்து கோளாக அமைந்த படம், தலைவி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்திருந்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் கங்கனா ஜெ.வின் பாத்திரத்திலேயே நடித்தார். இதற்காக அவர் 20 கிலோ எடை கூடினார். அதன் பிறகு ஏரியை  எடையை வெகு சில மாதங்களிலேயே குறைக்கவும் செய்தார். இதற்காக அவர் பின்பற்றிய டயட் மற்றும் உடற்பயிற்சி குறித்த விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

அதிகாலையில் சாப்பிட்டவை..

கங்கனா ரனாவத், அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பாராம். அதன் பிறகு வெள்ளை சர்க்கரை கலந்த மசாலா டீயையும் எடுத்துக் கொள்வாராம். இதன் பிறகு ஊற வைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சைகளை சாப்பிடுவார்.

காலை உணவு: 

கங்கனா, பெரும்பாலும் சமைத்த உணவுகளை காலையில் எடுத்துக் கொள்வதில்லை என ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். எப்போதும் ஃப்ரெஷ்ஷான பழங்களையே காலை உணவாக எடுத்துக் கொள்வாராம்.

காலை உணவிற்கு பிறகு…

காலை உணவிற்கு பிறகு கங்கனா தாலியா எனப்படும் உணவையும் உட்கொள்கிறார். இது கோதுமையினால் செய்யப்படுவதாகும். இதில் இருக்கும் பைபர் சத்துக்கள் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை அதிகரிக்க விடாமல் தடுக்குமாம். தாலியா சாப்பிட முடியாத நாட்களில் அவர் முழு தானியங்கள் அடங்கிய சீரியலை சாப்பிடுகிறார்.

மதிய உணவு: 

கங்கனா, நான் வெஜ் சாப்பிட விரும்பாதவராம். முழுக்க முழுக்க சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டும் அவர் வீட்டு உணவுகளை சாப்பிடுவாராம். வெளியில் எதையும் வாங்க மாட்டார் என கூறப்படுகிறது. வீட்டில் இருந்து வரும் சாதம், ரொட்டி, பருப்பு தால் ஆகியவை இவருக்கு பிடித்தமானவை.

நீர்ச்சத்து: 

உடல் எடையை குறைக்க உடலில் நீர்ச்சத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனால் எப்போதும் தனக்கு அருகிலேயே ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் அவர், பல சமயங்களில் இளநீர் அல்லது மோரும் குடிப்பாராம்.

ஹெல்தி ஸ்நாக்ஸ்: 

கங்கனா பழங்களை ஹெல்தி ஸ்நாக்ஸாக உட்கொள்வாராம். இது பசி உணர்வை குறைப்பதோடு உடலுக்கு சத்து கொடுப்பவை ஆகவும் இருப்பதாக அவர் நம்புகிறார். சில சமயங்களில் பழங்களுக்கு பதிலாக புரோட்டின் ஷேக்குகளை குடிக்கிறார். இதை பெரும்பாலும் அவர் மாலை வேலைகளில் எடுத்துக்கொள்கிறார்.

டின்னர்: 

கங்கனாவுக்கு தயிர் சாதம் அல்லது கிச்சடி சாப்பிட பிடிக்குமாம். அதையே பெரும்பாலும் டின்னருக்கு எடுத்துக் கொள்கிறார். அப்படி அது இல்லை என்றால் காய்கறி சாலட்டை சாப்பிட்டு தனது வயிற்றை இரவில் லேசாக வைத்துக் கொள்வார்.

வொர்க் அவுட்: 

கங்கனா ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் ஜிம்மிற்கு செல்வார். யோகா மூலம் தனது உடல் மற்றும் மன நலனை பாதுகாத்துக் கொள்ளும் அவர் ஒரு நாளில் 45 நிமிடம் உடலை வளைத்து நெளித்து யோகா செய்வதாக கூறப்படுகிறது. கூடவே மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றையும் அவர் செய்கிறார்.

மேலும் படிக்க | வெயிட் கூடாமல் இருக்க ஸ்ரீலீலா தினமும் 45 நிமிடம் ‘இதை’ செய்வாராம்! என்ன தெரியுமா?

மேலும் படிக்க | 4 மாதங்களில் வெயிட் லாஸ் செய்ய வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்! ரொம்ப சிம்பிள்..

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News