நேரங்கெட்ட நேரத்தில் டின்னர் சாப்பிட்டால்... உடல் எடை எக்குத்தப்பாக ஏறும்... இத்தனை பிர்சனைகளும் வரும்!

Health Problems: தினமும் நேரங்கெட்ட நேரங்களில் உணவு சாப்பிடுவதால் உடல்நலனுக்கு வரும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 25, 2025, 06:45 AM IST
  • இரவு 8-9 மணிக்குள் டின்னரை சாப்பிட்டு விட வேண்டும்.
  • டின்னருக்கும் தூங்குவதற்கும் 2-3 மணிநேரம் இடைவேளை இருக்க வேண்டும்.
  • இதில் இருந்து தவறினால் உடல்நலப் பிரச்னை வரலாம்.
நேரங்கெட்ட நேரத்தில் டின்னர் சாப்பிட்டால்... உடல் எடை எக்குத்தப்பாக ஏறும்... இத்தனை பிர்சனைகளும் வரும்!  title=

Health Problems Due To Late Dinner: உணவுப் பழக்கவழக்கம் என்பது ஒருவரது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானதாகும். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சரியான நேரத்தில் சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட சாப்பாட்டை உண்டு, சரியான உடற்பயிற்சியும், 7-8 மணிநேர தூக்கமும் இருந்தால் நிச்சயம் உடல்நலம் மட்டுமின்றி மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இந்த வாழ்க்கை முறையில் மாறுதல் இருந்தால் சில பிரச்னைகளும் ஏற்படும். 

குறிப்பாக, பலருக்கும் இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கம் இருக்கும். அதாவது, தூங்கச் செல்வதற்கு சற்று முன் இரவு உணவை சாப்பிடுவார்கள். இதனால் அவர்கள் சாப்பிட்ட உடனேயே தூங்கும் நிலையும் ஏற்படும். காரணமாக இரவு உணவை சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாமல் பணியிலோ அல்லது வேறு விஷயங்களிலோ கவனம் செலுத்துவார்கள். சரியான திட்டமிடல்கள் இல்லாதவர்களுக்கு இந்த பழக்கம் அதிகமாக இருக்கும்.

நேரங்கெட்ட நேரங்களில் சாப்பிடுவதால் வரும் பிரச்னை

மேலும், இப்போதைய காலகட்டத்தில் நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது, இரவு முழுவதும் ஊரை சுற்றி, தூக்கத்தை கெடுத்துக்கொண்டு பல உணவுகளையும் சாப்பிட்டு அதிகாலையில் தூங்குவது, நள்ளிரவில் ஆர்டர் போட்டு வீட்டில் சாப்பிடுவது என சில மோசமான பழக்கவழக்கங்களால் உடல்நலன் பாதிக்கப்படும். இரவு சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. பெரும்பாலும் இரவு 8 மணிக்குள் இரவு உணவை உண்டு 10 மணிக்கு பிறகு தூங்க வேண்டும்.

மேலும் படிக்க | பாதாம் அல்லது வால்நட்... தினமும் ஊற வைத்து சாப்பிட்டால் அதிக நன்மை எது?

அதாவது, இரவு உணவுக்கும், தூக்கத்திற்கும் குறைந்தது 2-3 நேரமாவது இடைவேளை இருக்க வேண்டும். அப்போதுதான் செரிமானம் சீராக இருக்கும். செரிமானத்திற்கு என நேரம் கிடைக்கும். அந்த வகையில், நேரங்கெட்ட நேரங்களில் உணவு சாப்பிடுவதால் வரும் பாதிப்புகள் என்னென்ன என தெரிந்துகொள்வது அவசியம்.

தூக்கம் கெட்டுப்போகும்

தாமதமாக இரவு உணவை உட்கொள்வதால் தூக்கம் சரியாக இருக்காது. சாப்பிட்ட உடன் மெத்தையில் படுத்துக்கொள்வது அசௌகரியத்தை உண்டாக்கும், தூக்கமும் சரியாக இருக்காது. மேலும், செரிமானம் அமைப்பு தூக்கத்திற்கான ஹார்மோன்கள் சுரப்பதில் பிரச்னையை தரலாம். இதனால் இரவில் தூக்கமில்லாமல் அடிக்கடி முழிப்புத் தட்டலாம். இதனால், காலையில் மந்தமாகவும், சோர்வாகவும் உணர்வீர்கள். 

ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்

இரவில் எப்போதும் தாமதமாக உணவு சாப்பிடுவது நிச்சயம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்கும். இரவு உணவுக்கு பின் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதும், உடனடியாக தூக்குவதும் இரண்டும் செரிமானத்தை பிரச்னைக்குள்ளாக்கும். இது ரத்த ஓட்டத்தில் பிரச்னையை உண்டாக்கி, ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இது இதயத்தில் நீண்ட கால பிரச்னையை ஏற்படுத்தலாம். 

வாயு பிரச்னை உண்டாகலாம்

தினந்தோறும் இரவில் தாமதமாக உணவை உட்கொள்வதால் செரிமானப் பிரச்னைகள் மட்டுமின்றி வாயு சார்ந்த பிரச்னைகளும் வரலாம். செரிமானம் சரியாக இருக்காது, வயிற்றில் அசௌகரியம் ஏற்படும். உப்புசம் சார்ந்த பிரச்னைகள் இருக்கும். தொடர்ந்து தாமதமாக இரவு உணவை சாப்பிடுவதால் வயிற்றில் புண், குடல் இயக்கத்தில் பிரச்னை, நெஞ்செரிச்சல் உள்ளிட்ட செரிமானம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படலாம். 

உடல் எடை ஏறும்

இரவில் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் செரிமானம் சரியாக இருக்காது என பார்த்தோம். சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால் கலோரிகள் அனைத்தும் கொழுப்பாக உடலில் தேக்கமடையும். இதனால், உடலில் கொழுப்புகள் அதிகமாகி, உடல் எடையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். இது தொடர்ந்தால் உடல்நலப் பிரச்னைகள் அதிகமாகலாம். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | ஆளி விதைகளை வறுத்து சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News