விஜய் 69 படம் தள்ளிப்போகிறதா..இந்த வருடம் வெளியாகவிருந்த படம் இத்தோட எப்போ வெளியாகபோகுது தெரியுமா!

விஜய் நடிக்கும் கடைசி படமான இப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த மன வருத்தத்திலிருந்தாலும் மறுபக்கம் விஜய் அரசியல் தொடங்கியது ரசிகர்கள் முதல் தமிழக மக்கள் வரை ஆர்வமாக உள்ளனர். விஜய் நடிக்கும் கடைசி படம் வெளியாவதில் சில மாற்றம். 

இந்த வருடம் தொடங்கிய சில நாட்களிலே பல படங்கள் வெளியாகி வருடத் தொடக்கத்தை மாசாக்கியது. மேலும் அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்கள் வரிசைக்கட்டி நிற்கிறது. அந்தவகையில் விஜய் நடிப்பில் வெளியாகவிருந்த 69 படம் சிலக் காரணத்தால் ஒத்திவைப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

1 /8

கமல்ஹாசன் தக் லைப், ரஜினிகாந்த் கூலி மற்றும் அஜித் குமாரின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, விக்ரமின் வீர தீர சூரன் மற்றும் சூர்யாவின் ரெட்ரோ..மேலும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ் என பல்வேறு நடிகர்களின் படங்கள் இந்த வருடம் வரிசையாக வெளியாகவுள்ளது.   

2 /8

இந்த ஆண்டு தளபதி 69 படம் வெளியாகும் என பல புரளி பரவி வந்தது. அந்தவகையில் ரசிகர்கள் தங்களின் கோபத்தை சமூக ஊடகங்களில் மீம்ஸ் செய்து திட்டி வருகின்றனர். 

3 /8

எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பாபி தியோல் உள்ளிட்ட பலரும் இணைந்து  நடிக்கின்றனர்.  

4 /8

அந்தவகையில் இப்படம் இந்த வருடம் வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானது. தகவல் வெளியான சில நிமிடங்களிலே விஜய் ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் கொட்டி தீர்க்கின்றனர்.

5 /8

விஜய் நடிப்பில் வெளியாகும் இப்படத்திற்கு டைட்டில் நாளைய தீர்ப்பு என்று வைக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் திரைத்துறை வட்டாரத்தில் வெகுவாக பரவி வருகின்றன.   

6 /8

விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம்.  இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திடீரென்று அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் தள்ளி வைத்தனர்.

7 /8

தளபதி விஜய் நடிக்கும் பகவத் கேசரி படத்தின் ரீமேக் என்று சில தகவல் பரவி வருகிறது. மேலும் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாகவும் அதற்காகக் கூடுதல் கால அவகாசம் எடுக்கும் என்று தகவல்கள் கூறப்படுகிறது.   

8 /8

விஜய் அரசியலில் அடுத்த ஆண்டு களமிறங்க போவதற்காகத்தான் படத்தைச் சரியாக அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைத்ததாக சில தகவல்கள் கூறுகிறது.