வெளிநாடு வேலை | தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்...! 10ம் வகுப்பு தேர்ச்சி, மாதம் ரூ.78,000 சம்பளம்

Tamil Nadu government jobs | வெளிநாடு வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு குட்நியூஸ் வெளியிட்டுள்ளது. மாதம் ரூ.78 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 24, 2025, 02:10 PM IST
  • தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு
  • வெளிநாடு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
வெளிநாடு வேலை |  தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்...! 10ம் வகுப்பு தேர்ச்சி, மாதம் ரூ.78,000 சம்பளம் title=

Tamil Nadu government jobs | வெளிநாடு வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான குட் நியூஸை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder, Plping Fabricator, Plping Rtter, Structure Fabricator. Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas cutter gbgb Piping Foreman ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் கூட போதும். அதிகபட்சம் மாதம் ரூ.78,000 வரை சம்பளம் கிடைக்கும். 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder, Plping Fabricator, Plping Rtter, Structure Fabricator. Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas cutter gbgb Piping Foreman ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேவை. ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட Welder பணிக்கு ரூ. 40,000/-முதல் ரூ.78,000/- வரை, Piping Fabricator ரூ. 40,000/- முதல் ரூ. 51,000/- வரை, Piping Fitter ரூ. 36000/- முதல் ரூ. 42000/- வரை, Structure Fabricator ரூ. 42000/- முதல் ரூ. 51,000/- ஊதியம் கிடைக்கும்.

Structure Fitter ரூ. 36,000/- முதல் ரூ. 42,000/- வரை, Millwright Fitter ரூ, 42,000/- முதல் ரூ.51,000/- வரை, Grinder/Gas cutter ரூ. 30,000/- முதல் ரூ.32,000/- வரை மற்றும் Piping Foreman ரூ. 53,000/- முதல் ரூ. 50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemcinm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 30.01.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.

இப்பணிகளுக்கான நேர்காணல் 31.01.2025 மற்றும் 01.02.2025 அன்று காலை 9:00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே. விருப்பம் உள்ளவர்கள் (Resume, Passport Orignal & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்), ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42. ஆலந்தூர் ரோடு. திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி சென்னை -32

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன வலைதளம்: www.ompmargower.tn.gov.b தொலைபேசி எண் 044-22502267 மற்றும் whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் படிக்க | உழவர் பாதுகாப்பு அட்டை குட் நியூஸ்..! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News