எச்சரிக்கை...மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்...

இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

Last Updated : Dec 11, 2018, 01:25 PM IST
எச்சரிக்கை...மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்... title=

இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் இன்று முதல் 3 நாட்களுக்கு அந்தப் பகுதிகளுக்குத் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

Trending News