IPL 2024, Chennai Super Kings: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் கோடை காலத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு இந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட உள்ளதால், அதன் பின்னரே ஐபிஎல் தொடரின் தேதிகளும், அட்டவணைகளும் வெளியாகும் என தெரிகிறது.
எம்ஐ, ஆர்சிபி
தலா ஐந்து முறை கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கோப்பையே வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மீதுதான் இந்த முறையும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது எனலாம்.
ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குள் வந்தது, ரோஹித்தை கேப்டன்ஸியில் இருந்து தூக்கியது, சூர்யகுமார், ஹர்திக் உள்ளிட்டோர் காயத்தில் இருப்பது என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு எதை கொண்டாடுவது, எதை நினைத்து கவலைப்படுவது என்பதே பெரிய குழப்பமாக உள்ளது.
விராட் கோலி விளையாடும் ஆர்சிபி அணி இந்த முறை ஏலத்தில் மிக சுமாராக செயல்பட்டுள்ளதாக ரசிகர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், வலுவான பேட்டிங்கை வைத்துள்ள அந்த அணி எப்படி செயல்படுகிறது என்பதும் பலராலும் ஊற்று நோக்கப்பட்டு வருகிறது.
சிஎஸ்கேவின் எதிர்பார்ப்பு
தோனிக்கு கடைசி தொடர் என கூறப்படுவதாலும், நடப்பு சாம்பியன் என்ற முறையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க அந்த அணியும் இந்த ஏலத்தில் பல வீரர்களை தூக்கியுள்ளது. ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி உள்ளிட்டோர் அதிலும் முக்கியமானவர்கள். எனவே, சென்னை சூப்பர் கிங்ஸை யார் இம்முறை தூக்கிவிடப்போகிறார்கள் என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது.
முக்கிய 3 காரணங்கள்
அதில் முதன்மையாக இருப்பவர் என்றால் சிஎஸ்கேவின் ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட்தான். தோனிக்கு அடுத்து கேப்டன் பொறுப்பை பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவதும் ருதுராஜ்தான். எனவே, சிஎஸ்கேவில் மட்டுமின்றி எதிர்கால இந்திய அணிக்கும் கூட இவரை கேப்டன் மெட்டிரியலாக இவரை தயார் செய்யலாம்.
மேலும், கடந்த சில சீசனை போல ஓப்பனிங்கில் ரன்களை வாரிகுவித்தால் மட்டுமே பல போட்டிகளை சிஎஸ்கே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலும். பவர்பிளே ஓவரில் இவரின் ஆட்டம் தவிர்க்க முடியாதது. எனவே, இவர் வரும் டி20 உலகக் கோப்பைக்கும் இந்திய அணியில் முக்கிய வீரராக இருப்பார்.
இவை மட்டுமின்றி, ருதுராஜ் கடந்த ஐபிஎல் சீசனில் இருந்தே முரட்டு பார்மில் இருக்கிறார் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்திய அணியின் வெள்ளை பந்து பார்மட்களில் முக்கிய வீரராக இருப்பவர் ருதுராஜ். ஓடிஐ உலகக் கோப்பைக்கு பின் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் அடித்த ஒரு சதத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
6ஆவது கோப்பையும், ஐபிஎல் கோப்பையும்
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கும் இவர் ஐபிஎல் தொடரின்போது தயாராகிவிடுவார் என்றே கணிக்கப்படுகிறது. அந்த வகையில் ருதுராஜ் மீண்டு வந்து சிஎஸ்கேவில் புயலை கிளப்பிவிட்டால், சிஎஸ்கே அணிக்கு 6ஆவது கோப்பை மட்டுமின்றி இந்திய அணியின் ஐசிசி கோப்பை தாகமும் தணியும் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிக்காக உலக கோப்பையை தவிர்த்த ஹர்திக் பாண்டியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ