Union Budget 2025: இன்னும் சில நாட்களின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் குறித்து பலதரப்பட்ட மக்களுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பட்ஜெட் தாக்கலுக்காக அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்
இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்று தொழிலாளர் சட்ட விதிகள் தொடர்பானதாகும். மோடி அரசு தொழிலாளர் சட்ட விதிகளை அமல்படுத்துவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவிருக்கும் பட்ஜெட்டில் தொழிலாளர் சட்டங்களை படிப்படியாக செயல்படுத்தும் திட்டத்தை அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Labour Code: தொழிலாளர் குறியீடுகள்
இந்த புதிய தொழிலாளர் குறியீடுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குறியீடுகளின் அடிப்படையில் ஊழியர்களின் வேலை நேரம் அதிகரிக்கும். மேலும், வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் வாய்ப்பும் இருக்கும். இபிஎஃப் கணக்கிற்கு (EPF Account) கழிக்கப்படும் தொகை அதிகரிக்கும். இதனால் மாதா மாதம் கையில் கிடைக்கும் சம்பளத்தின் அளவு குறையலாம்.
புதிய தொழிலாளர் குறியீடுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்
- தொழிலாளர் சட்டம் அனைத்து சிறு மற்றும் பெரிய வணிகங்கள் மற்றும் வணிகர்களுக்கும் புதிய கொள்கைகளை செயல்படுத்த நேரம் கொடுக்கும்.
- அரசாங்கம் இந்தக் குறியீடுகளை 2025 பட்ஜெட்டில் அறிவித்தால், அது வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.
- இந்த குறியீடுகள் வணிகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு செயல்பாடுகளை எளிதாக்கும்.
- மேலும், இதன் மூலம் ஊழியர்களுக்கும் சிறந்த சமூகப் பாதுகாப்பும் கிடைக்கும்.
Labour Code: எந்த கட்டத்தில் என்ன மாற்றம் இருக்கும்?
- முதல் கட்டத்தில், 500 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பெரிய நிறுவனங்கள் இந்த குறியீடுகளைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்படும்.
- இரண்டாம் கட்டத்தில், 100-500 ஊழியர்களைக் கொண்ட நடுத்தர நிறுவனங்கள் புதிய தொழிலாளர் குறியீடுகளின் வரம்பிற்குள் கொண்டுவரப்படும்.
- மூன்றாம் கட்டத்தில், இந்த குறியீடுகள் 100 க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட சிறிய நிறுவனங்களில் செயல்படுத்தப்படும்.
Labour Code: சிறு வணிகங்கள் இதை செயல்படுத்த எவ்வளவு நேரம் கிடைக்கும்?
தொழிலாளர் சட்டத்தின் புதிய விதிகள் மற்றும் திட்டத்தின் கீழ், சிறு வணிகங்கள் இந்த விதிகளை செயல்படுத்த சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகின்றது. இந்தியாவின் வணிக கட்டமைப்பில் 85% க்கும் அதிகமான பங்களிப்பை MSME அதாவது சிறு தொழில்கள் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் குறியீடு தொடர்பாக மாநிலங்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தை
இந்த விதிகளை அமல்படுத்துவதற்காக தொழிலாளர் அமைச்சகம் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களுடன் வரைவு விதிமுறைகளை இறுதி செய்யும் பணியில் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. அரசாங்கம் முதல் கட்டத்தில் ஊதியச் சட்டத்தையும் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தையும் செயல்படுத்த விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 2025 க்குள் அனைத்து மாநிலங்களுடனும் வரைவு விதிகள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What is Labour Code? தொழிலாளர் குறியீடு என்றால் என்ன?
இந்திய அரசு 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்டங்களாக ஒருங்கிணைத்துள்ளது. அவற்றின் முக்கிய நோக்கம் வணிகங்களை வலுப்படுத்துவதும் ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும் ஆகும்.
- Wage Code: ஊதியக் குறியீடு
- Social Security Code: சமூகப் பாதுகாப்பு குறியீடு
- Industrial Relations Code: தொழில்துறை உறவுகள் குறியீடு
- Occupational Safety, Health and Working Condition Code: தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு
இனி வாரத்தில் 4 நாள்தான் வேலையா?
தொழிலாளர் குறியீடுகளில் ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் வேலை மற்றும் மூன்று நாட்கள் ஓய்வு என்ற கொள்கையும் அடங்கும். இந்த விதியின் நோக்கம், ஊழியர்களின் பணிக்கும் வாழ்க்கைக்கும் இடையில் ஒரு சமநிலையை உருவாக்குவதாகும். இருப்பினும், வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற விதி வேலை நேரத்தை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தகது. மேலும், வருங்கால வைப்பு நிதியில் கழிக்கப்படும் பணமும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. அப்படி நடந்தால், கையில் கிடைக்கும் சம்பளத்தின் அளவு குறையலாம். எனினும், முழுமையான தகவல்கள் கிடைத்தவுடன் தான் அனைத்தும் தெளிவாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ