Annamalai: இட்லி சுட வரவில்லை...ஜெயலலிதா போல் முடிவு எடுப்பேன் - அண்ணாமலை அதிரடி

தமிழ்நாட்டில் தோசை - இட்லி சுட வரவில்லை, அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 7, 2023, 05:33 PM IST
Annamalai: இட்லி சுட வரவில்லை...ஜெயலலிதா போல் முடிவு எடுப்பேன் - அண்ணாமலை அதிரடி title=

சென்னை  விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சரை நன்றாக தூங்க விடுங்கள். சரியாக தூங்காததால் முதலமைச்சர் பிதற்றல்களை பேசுகிறார். நன்றாக தூங்கினால் தெளிவாக பேச முடியும். ஒய்வு இல்லாமல் உள்ளார். தமிழக அரசியலில் ஜாதிகளை கலந்த ஒரே கட்சி திமுக தான். பிரிவினையை கொண்டு வந்த பெருமையும் திமுகவிற்கு தான்.  இந்தியாவில் வடக்கு, தெற்கு, தமிழகத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, கொங்கு என கொண்டு வந்தது திமுக தலைவர். 

உதயநிதி மீது சாடல்

சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோரை கொன்றது பிரதமர் என பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் சொன்னார். அவரை கேபினட் மந்திரியா போட்டு தமிழ்நாட்டு அமைதியாக இருக்கு என்றால் என் மீது எப்.ஐ.ஆர். போடுகின்றனர். அடுப்பு கரியை பார்த்தால் அண்ட கரிக்கு பொறாமை வந்து விடும். தேஜ்ஸ்வி யாதவ் முதலமைச்சரின் பேரன் வயது. அவர் தந்தையின் தயவுடன் பிகாரின் துணை முதல்வராக உள்ளார். பேரன் வயதில் உள்ள துணை முதல்வரின் சான்று வாங்குவது, முதலமைச்சர் பெருமைபடுவது அவரது அரசியல் தாழ்ந்து போய் உள்ளது என்பதை காட்டுகிறது. 

மேலும் படிக்க | ஒரே நாடு, ஒரே கல்வி என ஒரே சாப்பாடு என்ற நிலை ஏற்படும் - அமைச்சர் பொன்முடி பேச்சு!

திமுகவின் தேசிய அரசியல்

தேசிய அரசியல் என்றால் கே.சி.ஆர், மம்தா, நிதிஷ்குமார், அரவிந்த் ஜெக்ரிவால் வந்து இருக்க வேண்டும். சினிமாவில் ஹீரோ பின்னால் 2ம் தர ஹீரோக்கள் பேசுவது போல் இருந்தது. இதை பார்த்து பா.ஜ.க பயப்பட போகிறதா?. மோடி ஆட்சியில் யாரை பார்த்தும் எங்கு பயம் இல்லை. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் காலத்தில் எவ்வளவு பெரிய தலைவர்கள் வந்து இருந்தார்கள். குழந்தைகளை அழைத்து வந்து பேசுவது தமிழக மக்களை அசிங்கப்படுத்துவதாக உள்ளது. 

மு.க.ஸ்டாலின் ஏமாற்றுகிறார்

முல்லை- பெரியாறு அணை விவகாரத்தில் 2 முதலமைச்சர்களும் மக்களை ஏமாற்று கின்றனர். 2024ம் ஆண்டு தேர்தலுக்காக தமிழக முதலமைச்சரும் கேரள முதலமைச்சரும் இணைந்து சதி திட்டம் தீட்டுவது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. தமிழகத்தை பற்றியோ கேரளாவை பற்றியோ கவலை கிடையாது. இந்திய அரசியலில் எம்.பிக்கள் கிடைத்தால் டெல்லி சென்று பேரம் பேசலாம் என்பதற்காக இணைந்து உள்ளனர். அதுப்போல் தான் வைகோவும். கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அடுத்த தலைவர்கள் உருவார்கள். 

பாஜக வளர்ச்சி 

திராவிட கட்சிகளை சார்ந்து தான் பா.ஜ.க. வளரும் என்று குற்றச்சாட்டு இருந்தது. பா.ஜ.க.வில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. இது பா.ஜ.க.வின் வளர்ச்சியை காட்டுகிறது. யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லட்டும். கொள்கை உள்ளவர்கள் இருப்பார்கள். 

ஜெயலலிதா போல் முடிவு எடுப்பேன்

பா.ஜ.க.வில் இருந்து சேர்த்து தான் பெரிய கட்சி என காட்ட வேண்டுமா?. அந்த நிலைமைக்கு உங்கள் கட்சி வந்து விட்டதா என மக்கள் நினைக்கின்றனர். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும். தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும். தலைவர்கள் முடிவு எடுத்தால் 4 பேர் கோபித்து கொண்டு வெளியே வருவார்கள். நானும் அந்த வரிசையில் தலைவர் தான். பா.ஜ.க.வில் மேனேஜராக இல்லை. கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவும் எடுப்பேன். வரும் காலத்தில் வேகம் அதிகமாக தான் இருக்கும். குறைய போவதில்லை என பேசியுள்ளார். 

மேலும் படிக்க | கடந்த 20 மாதங்களில் 561 திருக்கோயில்களில் குடமுழுக்குகள்: அமைச்சர் சேகர்பாபு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News