தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்க்கு கர்நாடக மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டது. தமிழகத்தை சேர்ந்த வாகனங்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று தமிழக மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஆதரவு கிடைத்தது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தஞ்சை , திருவாரூர், நாகை உள்ளிட்ட பெரும் பகுதிகளில் கடைகள் 90 சதவீதம் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பஸ்கள் இயங்கின, ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கின. சில பகுதிகளில் தனியார் பள்ளிகள் மூடப்பட்டு கிடந்தன.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழுக்கடையடைப்பு நடத்த பல்வேறு வணிகர் சங்கங்கள், விவசாய அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழகம் முழுவதும் கடைகளை அடைக்க , விவசாய சங்கத்தினர் , வணிகர் சங்க பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன, இதனை ஏற்று பல்வேறு கடைகளும் முழு அளவில் அடைக்கப் பட்டுள்ளன. இதற்கு தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., இடது சாரிகள், தொ.மு.ச.., சிஐடியு., உள்ளிட்ட கட்சிகள் , அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.