Tamil Nadu Election: பாதுகாப்பு பணிகளுக்கு 4500 துணை ராணுவப் படையினர்

தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கான ஆலோசனையை மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் மேற்கொண்டுள்ளன. நான்காயிரத்து ஐநூறு துணை ராணுவ வீரர்களை தேர்தல் பாதுகாப்புக்காக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 21, 2021, 05:55 AM IST
  • தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் தொடர்பாக மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் ஆலோசனை
  • தமிழகத்திற்கு 4500 துணை ராணுவப்படையினர் பாதுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்
  • இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிவிக்கை வெளியாகும்
Tamil Nadu Election: பாதுகாப்பு பணிகளுக்கு 4500 துணை ராணுவப் படையினர் title=

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கான ஆலோசனையை மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் மேற்கொண்டுள்ளன. நான்காயிரத்து ஐநூறு துணை ராணுவ வீரர்களை தேர்தல் பாதுகாப்புக்காக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 250 கம்பெனி மத்திய ஆயுதப்படைகளை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Also Read | தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முதலமைச்சர்

அதோடு தமிழகத்துக்கு 45 கம்பெனி மத்திய ஆயுதப்படைகள் அனுப்பப்படும். புதுச்சேரிக்கு 10 கம்பெனி அனுப்பப்பட உள்ளது.

ஒரு கம்பெனி என்பது சுமார் 100 வீரர்கள் அடங்கிய பிரிவு. அதன்படி தமிழகத்துக்கு 4 ஆயிரத்து 500 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Also Read | புதுவை கவர்னர் கிரண் பேடி நீக்கம்; தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News