பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 10 லட்சம் நிதியுதவி- லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு கலவரத்தில் சேதமடைந்த மீனவர்களின் வீடுகளையும், கடைகளையும் சீரமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். 

Last Updated : Jan 27, 2017, 10:54 AM IST
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 10 லட்சம் நிதியுதவி- லாரன்ஸ் title=

சென்னை: ஜல்லிக்கட்டு கலவரத்தில் சேதமடைந்த மீனவர்களின் வீடுகளையும், கடைகளையும் சீரமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வந்தனர். மாணவர்களின் எழுச்சி போராட்டத்தையடுத்து, தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. ஆனால், நிரந்தர சட்டம் வேண்டும் என கோரி, மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தும் பொருட்டு காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தது. இதனால் மீனவர் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளும், மீன் கடைகளும் சேதமடைந்தன. இந்நிலையில் சேதமடைந்த மீனவர்களின் வீடுகளையும், கடைகளையும் சீரமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். 

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ:-

Trending News